மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 27,000 வரை உயரும் அகவிலைப்படி!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 27,000 வரை உயரும் அகவிலைப்படி!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 27,000 வரை உயரும் அகவிலைப்படி!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 27,000 வரை உயரும் அகவிலைப்படி!

தற்போது 7வது சம்பள கமிஷனின்படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த தவணைக்கான அகவிலைப்படி (DA) தொகை 4% ஆக உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆண்டு சம்பளம் ரூ.6840 முதல் ரூ.27,312 வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) தொகை 4% வரை உயர்த்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி தொகை 4 சதவீதமாக இருக்கும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இப்போது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) மூலம் இந்த உயர்வு 4 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, மே மாதத்தில் வெளியான ஏஐசிபிஐ குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு 129 ஆக இருந்தது. இதை தொடர்ந்து ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ எண்கள் மேலும் உயர்ந்தால் அகவிலைப்படி தொகை 5% அல்லது 6% ஆக உயர்வு உயர வாய்ப்புள்ளது. இந்த புதிய டிஏ உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும் இதனுடன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அடுத்த 2 நாட்கள் தொடர் விடுமுறை – இதற்காக தான்!

தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என்றளவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த 4% உயர்வுக்குப் பிறகு ஒட்டுமொத்த டிஏ 38 சதவீதமாக இருக்கும். இந்த 4% அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரக்கூடும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரூ.18,000 என குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 38% DA உயர்வு மூலம் மாதத்திற்கு ரூ. 6840 கிடைக்கும். மேலும், ரூ.56900 சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 38% DA உயர்வு மூலம் மாதத்திற்கு ரூ. 2276 வரை கூடுதல் தொகை கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here