FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு! வாடிக்கையாளர்கள் ஹாப்பி!

0
FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட் - வட்டி விகிதம் அதிரடி உயர்வு! வாடிக்கையாளர்கள் ஹாப்பி!
FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட் - வட்டி விகிதம் அதிரடி உயர்வு! வாடிக்கையாளர்கள் ஹாப்பி!
FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு! வாடிக்கையாளர்கள் ஹாப்பி!

இந்தியாவில் மக்கள் கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு வந்த பிறகு பணம் சேமிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தனியார் வங்கி FD திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதம் உயர்வு:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் போது மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். அத்தகைய இக்கட்டான சூழலில் மக்கள் தங்களின் சேமிப்பு தொகைகளை பயன்படுத்த தொடங்கினர். மேலும் அந்த நேரத்தில் தான் மக்கள் சேமிப்பின் பயனையும் உணர்ந்தனர். அதனால் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்றது போல நிதி நிறுவனங்களும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் புதிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய பங்குச்சந்தை மாற்றங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாக முதலீட்டு திட்டங்களில் சேர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களில் ஒன்று பிக்சட் டெபாசிட்(FD). இந்த திட்டத்தில் சேரும் ஒரு நபர் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலத்தில் நீங்கள் உங்களின் முதலீட்டுடன் சேர்ந்து அதற்கான மொத்த வட்டித்தொகையையும் பெறலாம். இந்நிலையில் பிரபல தனியார் வங்கியான பெடரல் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான (FD) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் ரூ.50,000 மாத ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

Exams Daily Mobile App Download

அதாவது பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டியானது முதிர்வு காலத்தை பொறுத்து மாறுபடுகிறது. அதன் படி 7 முதல் 90 நாட்களுக்கு வட்டி 3 – 4% வரை வழங்கப்படுகிறது. அதே போல 91 நாட்கள் – 1 ஆண்டுக்கு 4.10% முதல் 4.80% வரை வட்டி அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் – 5 ஆண்டுகள் வரை 6% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல 2222 நாட்களுக்கு மேல் 6% வரை வட்டி வழங்கப்படும் என்று பெடரல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!