மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இமாச்சலப்பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது மொத்த அகவிலைப்படி 31% ஆக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

அகவிலைப்படி:

இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய மாநில அரசுகள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இனி நுகர்வோருக்கு 3 LPG சிலிண்டர்கள் இலவசம் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

அந்த வகையில் தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இமாச்சலப்பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தபட்டு தற்போது 31%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநில உருவாக்க தின விழாவில் இதற்கான அறிவிப்பை அம் மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் வெளியிட்டார். உயர்த்தப்பட்ட அகவிலைப்படியால் 2.25 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

LIC ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்…!

மேலும் 1.75 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர். இந்த நிலையில் 6,000 கோடி ரூபாய் பலன்களை உறுதி செய்யும் வகையில் அண்மையில் அம் மாநிலத்தில் புதிய ஊதிய விகிதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இரண்டு விருப்பங்களுடன் கூடுதலாக மூன்றாவது விருப்பம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் ,மாநில அரசின் புதிய ஊதிய விகிதங்களின் அடிப்படையில் இமாச்சல அரசின் ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!