ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – ஜாக்பாட் அறிவிப்பு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் - ஜாக்பாட் அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் - ஜாக்பாட் அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – ஜாக்பாட் அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு கட்சியினரும் மக்களை நோக்கி தங்கள் கட்சியின் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அதில், அறிவிக்கப்பட்டுள்ள 5 ஆண்டுகளுக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தினை பற்றி காண்போம்.

இலவச ரேஷன்:

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் தேர்தல் நடக்கும் போது தான் அனைத்து கட்சிகளும் புதிது புதிதாக பல்வேறு திட்டங்களை அறிவிக்கும். மக்களுக்கு நன்மைகளை அளிக்கும் திட்டங்கள் அதிக அளவில் கூறப்பட்ட கட்சியினர் தான் தேர்தலில் அதிக வாக்குகளை பெற முடியும். அதில், கூறப்படும் திட்டங்களில் பலவற்றை நிறைவேற்றியும் விடுகின்றனர் அரசியல் கட்சியினர். தற்போது நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர வாக்கு சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு, 144 தடை உத்தரவு அமல் – அரசு அனுமதி!

உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இடையில் ஆட்சியை பிடிக்க பலத்த போட்டி நிலவி வருகிறது. ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த 5 ஆண்டுகளுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், அதனுடன் சேர்த்து கடுகு எண்ணெய், இரண்டு சிலிண்டர், ஏழை மக்களின் சிறந்த ஆரோக்கியத்துக்காக ஒரு கிலோ நெய் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்துவர விமானங்கள் இயக்க அனுமதி – ஒன்றிய அரசு அறிவிப்பு!

தங்களது இந்த திட்டத்தை நிறுவதற்கு பாஜக அரசு தயாராக உள்ளதாகவும், நவம்பர் மாதமே இதற்காக ஆயத்தமாக இருந்த நிலையில், தேர்தல் அறிவிப்புகள் வெளியானதால் தான் இன்னும் அதை நீக்காமல் இருப்பதாகவும், மார்ச் மாதம் வரை மட்டுமே அந்த திட்டம் கிடைக்கும் என்றும் கூறினார். இந்த ரேஷன் திட்டத்தினை நிறுத்தும் பட்சத்தில் இதனை நம்பி இருக்கும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தேர்தல் களம் இந்த அறிவிப்பினால் கூடுதல் பதற்றத்தில் உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!