மாநில அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
அகவிலைப்படி உயர்வு என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகையாகும். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 6வது ஊதியக்குழு ஊழியர்களின் DA உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு மத்திய அரசால் அறிவிக்கப்படும். 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 31%ல் இருந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34%ஆக அதிகரித்தது. நாட்டில் உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகின்றன. மத்திய அரசைத் தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் அண்மையில் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட அரசுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இந்நிலையில் குஜராத் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில், ஆறாவது ஊதியக் குழுவின் கீழ், அரசுத் துறை ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) ஏழு சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்நிலையில், நிதித்துறை ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான விவேக் பரத்வாஜ் புதன்கிழமை இந்த உத்தரவு பிறப்பித்தார்.
அதிமுகவின் ஒற்றைத்தலைமை தீர்மானத்திற்கு தடை, OPS ஆதரவாளர்கள் கொண்டாட்டம் – தலைவர்கள் வரவேற்பு!
இருப்பினும், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசுத் துறைகளின் ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மட்டுமே அகவிலைப்படியைப் பெறுகின்றனர். தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளில் பணிபுரியும் சில ஊழியர்கள் மட்டுமே ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் ஜனவரி 1, 2022 முதல், அதிகரித்த DA இன் பலனைப் பெறுவார்கள். ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை அடுத்த மாதம் பெறவுள்ள ஜூன் மாத சம்பளத்தில் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.