தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை அளிப்பதாக அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்செயல் விடுமுறை:

தமிழகத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்யும் பணியை அரசு ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதனால் தான் அரசும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து ஆலோசித்து செயல்படுத்துகிறது. அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் இது அகவிலைப்படி உயர்வு போன்ற கோரிக்கைகள் விரைந்து செயல்படுத்தபட்டது இதற்கு எடுத்துக்காட்டு. இது மட்டுமில்லாமல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து வந்தனர்.

நாளை (ஏப்ரல் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!

பெருந்தொற்று காலத்தில் அலுவலகத்திற்கு வந்த காரணத்தால் பலரும் நோய் தொற்று பாதிப்பிற்கு ஆளானார்கள். மேலும் இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவர் சான்றிதழின் அடைப்படையில் இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்தும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறைக்கு அரசு அனுமதி வழங்குகிறது.

Jio நிறுவனத்தின் 30 நாட்களுக்கான சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இதை தவிர கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களுக்கும் தற்செயல் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்செயல் விடுப்பு பட்டியலில் அறுவை சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்துள்ள பெண் ஊழியருக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை அளிக்கப்படுயம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!