தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!

நாளை ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் 3வது அலையின் துவக்கமாக அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

வெளியூரில் வேலை செய்பவர்கள் பொங்கல் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். இதை கருதி கொண்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு 13 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்த தாமரை செல்வி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கும், 15 ஆம் தேதி தேதி திருவள்ளுவர் தினத்திற்கும், 16 ஆம் தேதி தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்ற கணக்கில் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 17 ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 18 தைப்பூசம் அரசு விடுமுறை ஆகும். ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 29ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!