மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 5% அகவிலைப்படி (DA) உயர்வு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 5% அகவிலைப்படி (DA) உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 5% அகவிலைப்படி (DA) உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 5% அகவிலைப்படி (DA) உயர்வு!

7வது சம்பள கமிஷனின் கீழ் ஊதியம் பெறும் சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 5% ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய DA விகிதம் மே 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பலன் பெற உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இப்போது 5 சதவீத DA உயர்வுக்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி தொகை தற்போது 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ‘மாநில அரசு ஊழியர்களின் நலன் கருதி இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஐந்து சதவீதம் உயர்த்தி அறிவிக்கிறேன். புதிய கட்டணம் மே 1 முதல் அமலுக்கு வரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதியை வெறுப்பதாக சொன்ன வெண்பா, கண்ணம்மாவை நினைத்து பெருமைப்படும் விக்ரம் – இன்றைய எபிசோட்!

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மார்ச் 30, 2022 அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை வழங்க ஒப்புதல் அளித்திருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடியாக இருக்கும் என்றும் DA அறிவிப்பால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!