மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை ஜூலை மாதத்தில் 4 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும் என்று தெரிகிறது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) தொகை கடந்த மார்ச் மாதத்தில் 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொகையும் மீண்டும் உயர்வை காணும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி தொகை அதிகரிக்கப்பட இருக்கிறது. இந்த உயர்வு 4% ஆக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மொத்த அகவிலைப்படி தொகையானது 38 சதவீதமாக உயரலாம் என்று தெரிகிறது.

Exams Daily Mobile App Download

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக உயரும். இப்போது அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தில் அளிக்கப்படலாம் என்று மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) புள்ளி விவரங்கள் கூறுகிறது. அந்த வகையில் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி தொகை 4 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 2022 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் AICPI குறியீடு 125 இருந்தது.

பகுதி நேர வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!

மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 126 ஆக உயர்வடைந்தது. இதற்கிடையில் ஏப்ரல் மாத புள்ளி விவரங்கள் இன்னும் வரவில்லை. தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான புள்ளி விவரங்கள் உயர்வடைந்தால் அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வு இருக்கும். இதன் மூலம் மொத்த DA 38 சதவீதமாக அதிகரிக்கும். இந்த உயர்வு மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் கணிசமாக உயரும்.

  • ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.56,900 என்றால்;
  • புதிய அகவிலைப்படி (38%) – மாதம் ரூ.21,622
  • அகவிலைப்படி இதுவரை (34%) – ரூ.19,346
  • மொத்த அகவிலைப்படி 21,622 – 19,346 = ரூ.2,276
  • ஆண்டு ஊதிய உயர்வு 2,276 x 12 = ரூ.27,312

  • ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால்;
  • புதிய அகவிலைப்படி (38%) – மாதம் ரூ.6840
  • அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.6120
  • எவ்வளவு அகவிலைப்படி 6840 – 6120 = ரூ 720
  • ஆண்டு ஊதிய உயர்வு 720 x 12 = ரூ.8,640

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!