இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.1 லட்சம் வரை ஊதியம்..!

0
இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.1 லட்சம் வரை ஊதியம்..!
இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.1 லட்சம் வரை ஊதியம்..!
இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.1 லட்சம் வரை ஊதியம்..!

இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை இந்திய விளையாட்டு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Physiotherapist, Nutritionist, Bio Mechanist போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Weightlifting Federation (IWLF)
பணியின் பெயர் Physiotherapist, Nutritionist, Bio Mechanist and Other
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு பணியிடங்கள்:

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) கீழ் செயல்பட்டு வரும் இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் (IWLF) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 • Physiotherapist – 02
 • Bio Mechanist – 01
 • Strength & Conditioning Expert – 01
 • Nutritionist – 01
 • Psychologist – 01
 • Masseur – 01
  Exams Daily Mobile App Download
இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு கல்வி தகுதி:
 • Physiotherapist, Psychologist, Bio Mechanist பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physiotherapy, Psychology, Applied Psychology, Biomechanics, Biophysics போன்ற பாடப்பிரிவில் Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Nutritionist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Clinical Nutrition and Dietetics, Food Science & Nutrition போன்ற பாடப்பிரிவில் M.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்
 • Strength & Conditioning Expert பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Sports and Exercise Science, Sports Science, Sports Coaching போன்ற பாடப்பிரிவில் Diploma, Bachelors அல்லது Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்
 • Masseur பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது 12 வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் Masseur, Massage Therapy, Sports Masseur ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேசிய / மாநில அரசு விளையாட்டு நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

IWLF வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

IWLF சம்பள விவரம்:
 • Masseur பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.35,000/- என்றும்,
 • Bio Mechanist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.1,00,000/- வரை என்றும்,
 • மற்ற அனைத்து பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை என்றும் மாத சம்பளமாக பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

IWLF தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IWLF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (07.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IWLF Notification Link

IWLF Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here