ITBP எல்லையோர காவல் படையில் Engineering பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.1,77,500/-
இந்திய – திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Assistant Commandant பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 15.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய – திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) |
பணியின் பெயர் | Assistant Commandant |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
எல்லையோர காவல் படை காலிப்பணியிடங்கள்:
Assistant Commandant பணிக்கு என 06 பணியிடங்கள் இந்திய – திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) காலியாக உள்ளது.
Assistant Commandant கல்வி விவரம்:
இந்த ITBP நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Assistant Commandant வயது விவரம்:
Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 15.12.2023 அன்று 30 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Assistant Commandant வயது தளர்வு:
- SC / ST – 05 ஆண்டுகள்
- OBC – 03 ஆண்டுகள்
- அரசு ஊழியர்கள் – 05 ஆண்டுகள்
- இராணுவ வீரர்கள் – 03 முதல் 08 ஆண்டுகள் வரை
Assistant Commandant ஊதிய விவரம்:
இந்த ITBP நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Pay Scale Level – 10 படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
சென்னை HCL நிறுவனத்தில் Consultant வேலை – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ITBP தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Document Verification
- Physical Standard Test (PST)
- Physical Efficiency Test (PET)
- Written Examination
- Interview
- Merit List
- Medical Examination
ITBP விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / Female / ExSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.400/-
ITBP விண்ணப்பிக்கும் வழிமுறை:
Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (15.12.2023) https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.