தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இது இலவசம் – வரவேற்கும் மக்கள்! இனி கவலையே இல்ல!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இது இலவசம் - வரவேற்கும் மக்கள்! இனி கவலையே இல்ல!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இது இலவசம் - வரவேற்கும் மக்கள்! இனி கவலையே இல்ல!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இது இலவசம் – வரவேற்கும் மக்கள்! இனி கவலையே இல்ல!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 1 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உதவும் வகையில் எண்ணற்ற பல திட்டங்களை திமுக தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அடுத்த கல்வியாண்டில் கொண்டு வர போகும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

புதிய திட்டம்:

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு அரசு 2022 – 2023-ம் கல்வி ஆண்டில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பிறகு கொரோனா காலத்திற்கு முன்பு இருந்தது போல நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த நேரத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அடிப்படை கல்வியை நன்கு கற்பிக்கும் நோக்கில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அரசு பள்ளியில் பயிலும் 1 – 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டம் குறிப்பிட்ட பகுதிகளில் அதாவது நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது. இனி வரும் நாட்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு நலத்திட்டமாக மலை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்வெட்டர் (கம்பளி ஆடை) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த அமைப்பின் கூட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு – அரசு எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை ஆகிய பகுதிகளில் ஆண்டு தோறும் மழை பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. அதனால் மாணவர்கள் கடும் குளிரில் நடுங்கும் சூழல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அடுத்து வரும் 2023 – 2024-ம் கல்வியாண்டில் மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வாங்க தமிழக அரசு ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!