TCS, Wipro, HCL உட்பட IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – 3.60 லட்சம் பேர் தேர்வு!

0
TCS, Wipro, HCL உட்பட IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - 3.60 லட்சம் பேர் தேர்வு!
TCS, Wipro, HCL உட்பட IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - 3.60 லட்சம் பேர் தேர்வு!
TCS, Wipro, HCL உட்பட IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – 3.60 லட்சம் பேர் தேர்வு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-22ம் நிதியாண்டில் இந்திய தொழில்நுட்ப துறையில் சுமார் 3.60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கை தகவல் அளித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக காணலாம்.

வேலை வாய்ப்புகள்

இந்த நிதியாண்டின் துவக்கத்தில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டிருந்த இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் IT துறையின் வளர்ச்சி முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு மத்தியில், உயர்மட்ட IT நிறுவனங்கள் புதியவர்களை பணியமர்த்தும் இலக்கை திருத்தியுள்ளன. குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதுவரை சுமார் 3,50,000 முதல் 3,60,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை (பிப்.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

இது உயர்மட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 14 – 18 சதவீதம் ஆகும். இதில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த நிதியாண்டில் 77,000 புதியவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளது. அதே போல இன்ஃபோசிஸ் 41,000 முதல் 42,000 வரையும், காக்னிசன்ட் நிறுவனம் 33,000, HCL நிறுவனம் 15,787, கேப்ஜெமினி நிறுவனம் 17,000, விப்ரோ நிறுவனம் 14,000 முதல் 15,000 வரையும் புதிய பணியாளர்களை சேர்த்துள்ளது. அந்த வகையில் கடந்த காலாண்டில் 19.5 சதவீதமாக இருந்த இந்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை இந்த காலாண்டில் 22.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், 2022-23ம் நிதியாண்டில் இந்த வேலைவாய்ப்புகளின் நிலைமை மேம்படத் தொடங்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஏனெனில் IT நிறுவனங்களின் தேய்மானம் 16 முதல் 18 சதவீதமாக குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், வரும் 2222ம் நிதியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை 19 முதல் 21 சதவீத வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தத் துறையின் அதிகபட்ச வருவாய் 230 முதல் 240 பில்லியன் டாலர்களை தொட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!

இப்போது வலுவான ஜி.சி.சி மற்றும் கேப்டிவ் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் கூடிய 15 முதல் 20 இந்திய IT நிறுவனங்களின் வளர்ச்சியால் இது பெரும்பாலும் இயக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் 3வது காலாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் கிளவுட் நடைமுறைகள் 20 முதல் 30 சதவீதம் வரை வளர்ந்துள்ளன. மேலும் மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் தளங்கள் இந்திய தகவல் IT நிறுவனங்களுக்கு 5 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளன. இதில், TCS மட்டும் சுமார் 3 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொகை அந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 12-15 சதவீதமாகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!