ஷாக்கிங் தகவல்.. கொத்து கொத்தாக வேலை இழக்க போகும் ஐ.டி ஊழியர்கள்!!

0
ஷாக்கிங் தகவல்.. கொத்து கொத்தாக வேலை இழக்க போகும் ஐ.டி ஊழியர்கள்!!
ஷாக்கிங் தகவல்.. கொத்து கொத்தாக வேலை இழக்க போகும் ஐ.டி ஊழியர்கள்!!
ஷாக்கிங் தகவல்.. கொத்து கொத்தாக வேலை இழக்க போகும் ஐ.டி ஊழியர்கள்!!

இந்தியாவில் வருங்காலத்தில் ஐடி துறையானது சரிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களின் வேலையை இழப்பார்கள் என டேலண்ட் எக்ஸோடஸ் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐடி ஊழியர்கள்

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல், பணவீக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐடி துறையிலும் சரிவு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா கால கட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போதும் ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை சீராக வைத்துக்கொள்ள தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி செய்ய வேண்டுமென அறிவுறுத்தியது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக ஊழியர்கள் Work From Home முறையில் பணி செய்து வந்தனர்.

இந்த நிலையில் திறமையான ஊழியர்களை மட்டும் வைத்து கொள்ள வேண்டும் என பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் வரும் ஆண்டுகளில் ஐடி துறை படிப்படியாக சரிவை நோக்கி செல்லும் என டேலண்ட் எக்ஸோடஸ் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு ஆண்டில் (2022) ஐடி துறையானது வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் ஒரு பக்கம் ஏராளமான ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

மாதத்தின் முதல் நாளே இப்படி ஒரு குட் நியூஸா? சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வீழ்ச்சி!

Exams Daily Mobile App Download

மேலும் அடுத்த (2023) நிதி ஆண்டில் ஐடி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. ஆனால் சம்பள உயர்வு, ஊழியர்களின் செயல்திறனில் உள்ள அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் 2025-ம் ஆண்டுக்குள் சுமார் 20 முதல் 22 லட்சம் பேர் தங்களின் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து நிறுவனங்களும் திறமையாக பணி புரியும் ஊழியர்களை மட்டும் வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 2025-ம் ஆண்டு சுமார் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும் அறிக்கையில் அதிர்ச்சியான தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!