ஆஃபர் லெட்டர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள் – பீதியில் ஊழியர்கள்!!!

0
ஆஃபர் லெட்டர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள் - பீதியில் ஊழியர்கள்!!!
ஆஃபர் லெட்டர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள் - பீதியில் ஊழியர்கள்!!!
ஆஃபர் லெட்டர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள் – பீதியில் ஊழியர்கள்!!!

இந்திய ஐடி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக மந்த நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் Business Line என்ற நிறுவனம் ஐடி நிறுவனங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

ஐடி நிறுவனங்கள்

கொரோனா கால கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ள தங்களின் ஊழியர்களை Work From Home முறையில் பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். தற்போது கொரோனா பரவல் குறைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் சில ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் தற்போதும் Work From Home செய்ய அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு ஊழியர்கள் மற்றொரு வேலையை தேடி செல்கின்றனர்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான TANCET நுழைவு தேர்வு – அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு!

இதையடுத்து தற்போது பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் தேவைக்கு தகுந்தவாறு பகலில் ஒரு வேலை என்றும் இரவில் ஒரு வேலை என்றும் பணி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மூன் லைட்டிங் முறைக்கு பல்வேறு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளன. இதில் குறிப்பாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ஊழியர்களுக்கு இரண்டு நேரமும் கிடையாது, இரவு வேறு வேலையும் கிடையாது’ மற்றும் ‘இரட்டை வாழ்க்கையும் கிடையாது’ என தெரிவித்துள்ளது. மேலும் Business Line தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Wipro, Infosys and Tech Mahindra உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தலை தவிர்த்து வருகிறது. இதே போல் பல ஐடி நிறுவனங்கள் தங்களின் ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெற இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் உலக நாடுகள் முழுவதிலும் தகவல் தொழில் நுட்பத்துறையானது மந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. Google, Microsoft, Facebook உள்ளிட்ட மாபெரும் நிறுவனங்களும் புதிய ஊழியர்களை நியமிப்பதை நிறுத்தி வைக்க உள்ளதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் ஐடி ஊழியர்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!