மெளன ராகம் 2வில் சத்யாவுடன் மீண்டும் சேர போகிறாரா வருண்? அடுத்த வார எபிசோடில் முக்கியமான ட்விஸ்ட்!

0
மெளன ராகம் 2வில் சத்யாவுடன் மீண்டும் சேர போகிறாரா வருண்? அடுத்த வார எபிசோடில் முக்கியமான ட்விஸ்ட்!
மெளன ராகம் 2வில் சத்யாவுடன் மீண்டும் சேர போகிறாரா வருண்? அடுத்த வார எபிசோடில் முக்கியமான ட்விஸ்ட்!
மெளன ராகம் 2வில் சத்யாவுடன் மீண்டும் சேர போகிறாரா வருண்? அடுத்த வார எபிசோடில் முக்கியமான ட்விஸ்ட்!

மெளன ராகம் சீரியலில், மல்லிகா தான் கார்த்திக்கின் முதல் மனைவி என்ற ரகசியம் அனைவருக்கும் தெரியவந்து உள்ளது. இப்படி இருக்கையில் இனி எப்படி வருண் – சத்யா இருவரும் ஓன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இணையத்தில் பரவி வரும் இந்த தகவலின் படி அடுத்த வார எபிசோடில் முக்கியமான ட்விஸ்ட் ஒன்று அரங்கேற உள்ளது.

சீரியலில் ட்விஸ்ட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மெளன ராகம் 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற சீரியலை விட மெளன ராகம் 2 டிஆர்பியில் கலக்கி வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் சீரியலில் அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்கள் தான். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ரவீனா தாகா நடித்துள்ளார். இவரின் நடிப்பு மிகவும் இயல்பாக உள்ளது. கடந்த 3 வரங்களாகவே இந்த சீரியலில் ட்விஸ்ட்கள் நிறைந்த எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் சத்யா- வருண் இருவரும் சில மாதங்களாக பிரிந்து உள்ளனர். இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த சத்யா, நான் சத்யா இல்லை சக்தி, கார்த்திக் கிருஷ்ணா தான் தன்னுடைய அப்பா என்று உண்மையை வருண் குடும்பத்தினரிடம் சொல்லிவிடுகிறார். இவ்வளவு நாளாக ஸ்ருதி உண்மை தெரிந்தும் நடித்து வந்தார். ஆனால் தற்போது வருண், ஷீலா, தருண், மனோகர் என அனைவரிடம் சத்யா உண்மையை சொன்ன, விஷயம் காதம்பரிக்கும் தெரிந்து விட்டது. சாது மிரண்டால் காடு கொள்ளாது கதை போல் தற்போது சத்யா பொங்கியதால் மொத்த குடும்பமும் கலங்கி உள்ளது.

குடும்பத்தினரின் முன்னிலையில் உண்மையை கூறிவிடும் மூர்த்தி – கோபியை திட்டி தீர்த்த பாக்கியா!

உண்மையை அறிந்த காதம்பரி கோபத்தில் மல்லிகாவை தேடி தானக்குடி சென்றுள்ளார். அவருடன் ஷீலாவும், ஸ்ருதியின் பாட்டியும் சென்றுள்ளனர். அங்கு காதம்பரி, மல்லிகாவின் கழுத்தை பிடித்து பிரச்சனை செய்தார். அப்போது சத்யா மல்லிகாவை காப்பாற்ற அரிவாளை எடுத்து மிரட்டி காதம்பரியை ஓட வைக்கிறார். இதற்கிடையில் மனோகர் வீட்டுக்கு போகும் கார்த்திக்கை கோபத்தில் திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் மனோகர். வீட்டுக்கு திரும்பும் கார்த்திக், அங்கே அவரின் அம்மாவிடம் நடந்ததை கூறி வருத்தப்படுகிறார். இந்நிலையில் அடுத்து எந்த நோக்கத்தில் கதை நகரும், வருண் – சத்யா மீண்டும் சேர்வார்களா இல்லையா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதாவது கார்த்திக்கின் அம்மா, மனோகர் வீட்டுக்கு போய் இதைப்பற்றி பேசி மனோகர் குடும்பத்தினரை சமாதானம் செய்வது போல் திருப்பம் வரலாம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here