பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபியா இது? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபியா இது? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபியா இது? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபியா இது? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ் தற்போது பெருமாள் வேடத்தில் நடித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி கோபி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. முழுக்க முழுக்க கோபியின் நடிப்பால் மட்டுமே ரசிகர்கள் பாக்கியலட்சுமி தொடரினை பார்த்து வருகின்றனர். தனது சாதாரணமான நடிப்பால் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கூட்டங்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். கோபியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே வழங்கலாம் போல, அந்த அளவுக்கு நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

Exams Daily Mobile App Download

பாக்கியலட்சுமி தொடருக்கு முன்பாகவே பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், எந்த திரைப்படமும் கோபிக்கு பாக்கியலட்சுமி சீரியல் அளவுக்கு ரீச்சை கொடுக்கவில்லை. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கோபிக்கு தான் சிறந்த வில்லன் என்கிற விருது கிடைத்தது. பல மாதக்கணக்கில் கோபி ராதிகாவிடம் மாட்டுவாரா, இல்லையா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாக்கியாவிடம் மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் கோபியின் முக பாவனைகள் அனைத்துமே அதிகமாக ரசிக்க வைக்கப்படுகிறது.

பாக்கியாவுடன் ராதிகா இருப்பதை பார்த்துவிடும் மூர்த்தி – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

சமூக வலைதள பக்கங்களிலும் கோபியை பற்றிய மீம்கள் தான் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. கோபியின் கதாபாத்திரத்தில் சதிஷ்க்கு பதிலாக வேறு எந்த நடிகரும் நடித்திருந்தாலும் கூட பாக்கியலட்சுமி தொடர் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்காது. தற்போது கோபி பெருமாள் வேடத்தில் நடித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. கோபிக்கு அனைத்து கதாபாத்திரமும் நன்றாக பொருந்துகிறதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!