“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முடிய போகிறதா? விரைவில் தொடங்கும் சீசன் 2! ப்ரோமோ ரிலீஸ்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் முடிய போகிறதா? விரைவில் தொடங்கும் சீசன் 2! ப்ரோமோ ரிலீஸ்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முடிய போகிறதா? விரைவில் தொடங்கும் சீசன் 2! ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. பல மொழிகளில் வெற்றி பெற்ற இந்த சீரியல் தமிழிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடிகை சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா சதீஸ், குமரன், காவ்யா அறிவுமணி, சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பல கதாபாத்திரங்கள் ஒரே குடும்பமாக நடித்து வருகின்றனர். நடுத்தரக் குடும்பத்தின் கஷ்டங்களை பற்றி இந்த சீரியலில் கதை கொண்டு செல்லப்படுகிறது.

விஜய் டிவி அர்ச்சனாவின் மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் – அவரே அளித்த ‘நச்’ பதிலடி!

இந்த சீரியலில் சுபகாரியங்கள் முதல் இறப்பு காரியங்கள் வரை நிஜத்தை மிஞ்சும் அளவிற்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் பலர் விரும்பி இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் இரண்டாம் சீசன் புது பொலிவுடன் பல கதாபாத்திரங்களுடன் தொடங்கப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

முன்னணி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாநாயகிகள் – ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!

அதில் அனைவரும் புதுமுகங்களாக இருக்கின்றனர். இரண்டாவது சீசன் தொடங்கப்படுவதால் ரசிகர்கள் உற்சகத்தில் இருந்தாலும் பழைய நடிகர்கள் இல்லாமல் இருப்பதால் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதன் பின் தான் உறுதியான தகவல் வெளியாகும். ஆனாலும் முதல் சீசனில் பலமாற்றங்கள் வர இருப்பதால் இன்னும் சில எபிசோடுகள் போகும் எனவே ரசிகர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here