தமிழக அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா? வைரலாகும் பதிவு!

0
தமிழக அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா? வைரலாகும் பதிவு!
தமிழக அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா? வைரலாகும் பதிவு!
தமிழக அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா? வைரலாகும் பதிவு!

தமிழக அரசின் லச்சினை (சின்னம்) ஆக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் பதிவு:

தமிழ்நாடு அரசு இலச்சினை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநில அரசால் அலுவல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் சின்னம் அல்லது இலச்சினை ஆகும். இந்த இலச்சினை தமிழ்நாடு அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலிலும், அரசு உயர் அலுவலக கட்டிட முகப்புகளிலும் இடம்பெறுகிறது. தமிழக அரசின் லச்சினை (சின்னம்) ஆக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகியவை சென்னை மாகாணமாக இருந்தது. சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1947–1949) இருந்த போது இந்த இலச்சினை பற்றிய முன்மொழிவு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அது தமிழ்நாட்டின் அரசு இலச்சினையாக 1949 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு கோபியை கண்டிக்கும் பாக்கியா – கோபி திருந்துவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த இலச்சினை மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர். கிருஷ்ணராவ் என்பவரால் வரையப்பட்டது. மேலும் தமிழக அரசின் லச்சினை(சின்னம்) ஆக இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு சின்னத்தில், திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் சத்யமேவ ஜெயதே என்ற வடமொழி சொல்லுக்கும் பதிவாக வாய்மையே வெல்லும் என்னும் தமிழ் வார்த்தை சேர்க்கப்பட்டது.

இந்த சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்க திட்டமிடப்பட்ட போதிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை மையமாக வைத்தே தமிழ்நாடு அரசின் சின்னத்தை தான் உருவாக்கியதாக ஓவியர் கிருஷ்ணராவ் பலமுறை கூறியிருந்தார். இருப்பினும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரமே தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்று இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் அந்த சின்னத்தை வடிவமைத்த கலைஞர் கிருஷ்ணராவ் தான் மதுரை தெற்கு கோபுரத்தை அடிப்படையாக கொண்டே அந்த சின்னத்தை வடிவமைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார் என குறிப்பிட்டு கட்டுரையின் புகைப்படத்தை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here