தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைவு? மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் மாணவர்களின் கற்றல் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் ஒரு அதிர்ச்சியான தகவலை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கற்றல் திறன்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் வகுப்பின் காரணமாக கிராமப்புற மாணவர்களுக்கு மொபைல் போன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கற்றலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கப்பட்டது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கின.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு மாற்றமடைந்துள்ளது என்பதை கண்டறிய ஒன்றிய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் ஆய்வு நடத்தியது. இதில் 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆன்லைன் வாயிலாக சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளுக்கும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் தமிழக மாணவர்களின் கற்றல் திறன் கடந்த 2017ம் ஆண்டை விட குறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒன்றிய கல்வி அமைச்சகம் இது குறித்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் திறன் அனைத்து பாடங்களிலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறன் மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் பருவமழை காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்ட மாணவர்கள் மட்டும் ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.