சீரியல் நடிகை ரச்சித்தா வாழ்வில் அடுத்து இப்படி ஒரு சோகமா? ஆதங்கத்தில் அவரே வெளியிட்ட பதிவு!

0
சீரியல் நடிகை ரச்சித்தா வாழ்வில் அடுத்து இப்படி ஒரு சோகமா? ஆதங்கத்தில் அவரே வெளியிட்ட பதிவு!
சீரியல் நடிகை ரச்சித்தா வாழ்வில் அடுத்து இப்படி ஒரு சோகமா? ஆதங்கத்தில் அவரே வெளியிட்ட பதிவு!
சீரியல் நடிகை ரச்சித்தா வாழ்வில் அடுத்து இப்படி ஒரு சோகமா? ஆதங்கத்தில் அவரே வெளியிட்ட பதிவு!

விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சித்தா. அவர் கலர்ஸ் தமிழ் சேனலில் கமிட்டான புதிய சீரியல் “இது சொல்ல மறந்த கதை”. அந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக வெளியான செய்திக்கு செம கடுப்பில் அவர் பதில் அளித்து இருக்கிறார்.

நடிகை ரச்சித்தா :

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமான சீரியல்களை கொடுத்த விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் “சரவணன் மீனாட்சி”.இந்த சீரியலின் இரண்டாவது சீசனில் மீனாட்சியாக அறிமுகமாகி ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாரித்தவர் தான் நடிகை ரச்சித்தா மகாலக்ஷ்மி. அதன் பின் பல சீரியல்களில் நடித்த அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2” சீரியலில் நடிகர் செந்திலிற்கு ஜோடியாக நடித்து வந்தார்.

ஆனால் சீரியல் குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் அந்த சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். அதன் பின் பல விமர்சனங்களை சந்தித்த அவர், கலர்ஸ் தமிழ் சேனலில் புதிதாக தொடங்கப்பட்ட இது சொல்ல மறந்த கதை சீரியலில் கதாநாயகியாக களமிறங்கினார். அவருக்கு ஜோடியாக நடிகர் விஷ்ணு நடித்து வந்தார். இரு குழந்தைகளை வைத்து கொண்டு இருக்கும் விதவை தாயை பற்றிய கதையை மையமாக கொண்டு அந்த சீரியல் ஒளிபரப்பானது.

இது என்ன புது Twist-ஆ இருக்கு – இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை!

Exams Daily Mobile App Download

சீரியல் தொடங்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தற்போது அந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து ரச்சித்தா கூறுகையில், இந்த சீரியலில் கமிட் ஆக வேண்டாம் என என்னை சொன்னவர்களை திட்டி இதில் கமிட் ஆனேன். ஆனால் நான் தவறான முடிவு எடுத்ததை கலர்ஸ் தமிழ் சேனல் நிரூபித்துவிட்டது. தயவு செய்து உங்களுடைய குறைகளை நடிகர்கள் மீது போடாதீங்க, நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க! நான் சாதனா கதாபாத்திரத்தை மிஸ் செய்கிறேன். குட் பை சாதனா! என செம ஆதங்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here