பிக் பாஸ் சீசன் 6 ல் ஜி.பி.முத்துவின் சம்பளம் இத்தனை லட்சமா? – வெளியான அதிர்ச்சி தகவல்!

0
பிக் பாஸ் சீசன் 6 ல் ஜி
பிக் பாஸ் சீசன் 6 ல் ஜி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது.இந்நிலையில் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் ஜி.பி.முத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார்.

ஜிபி முத்துவின் சம்பளம்:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளை கடந்து இந்த முறை மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக கமல் விலகியதால் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் இந்த சீசனில் கமல் மீண்டும் தொடர்வாரா? இல்லையா?  என்பது பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் உலக நாயகனே மீண்டும் பிக் பாஸ் சீசன் 6நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கிவருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக சமூகவலைதள பிரபலமான ஜி.பி. முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

ஜி பி முத்து போட்டியில் எந்த அளவில் கலந்து கொள்வார் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில் கடுமையான டாஸ்க் ஒன்றில் ஜெயித்து ஜி.பி. முத்து பிக் பாஸ் சீசன் 6 வீட்டின் முதல் தலைவராக பொறுப்பேற்றார்.  இவர் தனது சக போட்டியாளர்களுடன் சேர்ந்து செய்த ரகளைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஆனால் திடீரென கடந்த வாரத்தில் பிக்பாசிடம் ஜிபி முத்து தான்  தனது மகனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் பிக்பாஸ் ஜிபி முத்துவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ஜிபி முத்து தொடர்ந்து தனது மகனை குறித்து கவலையிலிருந்து அழுது கொண்டிருந்தார். இதனால் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் அவர்கள் ஜி.பி.முத்துவை உள்ளே தனியாக அழைத்து அவரிடம் விசாரித்த போது தன்னால் தன் மகனை காணாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார். இதனால் அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு ஜி.பி.முத்துவிற்கு  அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டில் 14 நாட்கள் இருந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜி பி முத்து 14 நாட்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!