தமிழகத்தில் ஏப்ரல் 13 பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் ஏப்ரல் 13 பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஏப்ரல் 13 பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஏப்ரல் 13 பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா மிக சிறப்பாக ஏராளமான பக்தர்கள் உடன் சாமி தரிசனம் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 13 அன்று நடக்கவுள்ள சித்திரை திருவிழா குறித்து தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஹாப்பி நியூஸ் கொடுத்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா:

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு என்றே சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக இன்று வரை விளங்கி வருகிறது. இந்த ஆலயத்தைக் காண்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவையொட்டி 18 நாட்கள் திருவிழா கொண்டாட்டம் நடைபெறும்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வேலை – 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாரம்பரியம் பெற்ற இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெறாமல் இருந்து தற்போது கொரோனா குறைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வரும் நிலையில் கடந்த மாதம் ஏழாம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. அதை தொடர்ந்து இன்று தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மேலும், முக்கிய நிகழ்வாக பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவின் சொல்லப்படும் திருத்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அப்பேற்பட்ட திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ள காரணத்தால் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக ஏப்ரல் 13 அன்று அளிக்கப்படுகிறது. மேலும், அதற்கு பதிலாக மே 14 அன்று பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிக்கையாக வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!