தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக விநியோகத்தில் முறைகேடு? அமைச்சர் ஆலோசனை!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக விநியோகத்தில் முறைகேடு? அமைச்சர் ஆலோசனை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக விநியோகத்தில் முறைகேடு? அமைச்சர் ஆலோசனை!தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக விநியோகத்தில் முறைகேடு? அமைச்சர் ஆலோசனை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக விநியோகத்தில் முறைகேடு? அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாட புத்தகங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இலவச பாடப்புத்தகம்:

தமிழகத்தில் 1 – 10 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 வருடத்தில் ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் சரியாக வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் முன்னேரே விடுமுறை நாட்களில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நேரில் வந்து பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பாடப்புத்தகங்களை பெற்றனர். பின்னர் அப்புத்தகங்கள் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இப்புத்தகங்கள் பள்ளிகள் தொடங்கும் போது மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இந்த இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்விதுறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PM கிசான் திட்டத்தின் 12வது தவணையை பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்!

இந்த நிலையில் புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என புகார் எழுந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி நிலையும் பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூலை 15ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் இலவச பாட புத்தகம் விநியோகம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இலவச புத்தகம் விநியோகத்துடன் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசின் அங்கீகாரம் பெறாமல் நர்சரி, பிரைமரி பள்ளிகள் நடத்தப்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here