விஜய் டிவி ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் ரசிகரக்ளுக்கு ஹாப்பி நியூஸ் – ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர்!

0
விஜய் டிவி 'கனா காணும் காலங்கள்' சீரியல் ரசிகரக்ளுக்கு ஹாப்பி நியூஸ் - ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர்!
விஜய் டிவி 'கனா காணும் காலங்கள்' சீரியல் ரசிகரக்ளுக்கு ஹாப்பி நியூஸ் - ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர்!
விஜய் டிவி ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் ரசிகரக்ளுக்கு ஹாப்பி நியூஸ் – ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல சீரியல்களில் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான சீரியல் கனா காணும் காலங்கள். இந்த தொடரில் நடித்ததன் மூலம் புகழின் உச்சியை அடைந்த பிரபலங்கள் அநேகர் உண்டு. அந்த வகையில் தற்போது ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிப்பரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியலில் மீண்டும் பிரபல நடிகர்கள் ரீ என்ட்ரி கொடுக்கப்போகும் தகவல் வெளியாகியுள்ளது.

கனா காணும் காலங்கள்:

சின்னத்திரை தொடரில் 13 வருடங்களுக்கு முன்பு பள்ளி கதையை மையமாக கொண்டு 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி பார்த்து வந்த கனா காணும் காலங்கள் தொடர் அதிகளவு ரீச் கொடுத்தது. இந்த தொடரின் மூலம் அறிமுகமாகிய ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி போன்றவர்களின் கதாபாத்திரங்களை இன்று வரை மறக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று பிரபலமாகிய நடிகர்களில் சிலர் இவர்கள் தான்.

விரைவில் முடிய இருக்கும் ஜீ தமிழ் “என்றென்றும் புன்னகை” சீரியல் – வைரலாகும் இறுதி நாள் புகைப்படம்!

கனா காணும் காலங்கள் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, கனா காணும் காலங்கள் பருவம் 2, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என மொத்தம் 4 சீசன்கள் ஒளிபரப்பாகின. இவ்வாறு அடுத்தடுத்து ஒளிபரப்பாகிய அனைத்து கனா காணும் காலங்கள் சீசன்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. எத்தனை சீசன்கள் வந்தாலும் கூட ஃபர்ஸ்ட் சீசன் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக தான் உள்ளது. இந்நிலையில் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ் வடிவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

இதில் சமூக வலைதளங்களில் பிரபலமாகிய தீபிகா, வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடித்து வருகிறார். எல்லா சீசன்கள் போலவே இதுவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த சீசனை மெழுகேற்றும் வகையில் கனா காணும் காலங்கள் முதல் பாகத்தில் வினித் ரோலில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த இர்ஃபான் ஜெர்ரி ரோலில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியல் தளம் இர்ஃபானுக்கு சிறப்பான கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!