இனி எளிய முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம் – ஐஆர்சிடிசி இணையதளம் அப்டேட்!!

0
இனி எளிய முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம் - ஐஆர்சிடிசி இணையதளம் அப்டேட்!!
இனி எளிய முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம் - ஐஆர்சிடிசி இணையதளம் அப்டேட்!!
இனி எளிய முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம் – ஐஆர்சிடிசி இணையதளம் அப்டேட்!!

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் தங்கள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சுலபமாக புரியும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே இணையதளம்:

கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில்களில் பயணம் செல்ல தற்போது முன்பதிவு செய்வது அவசியமான ஒன்றாக உள்ளது. பெரும்பாலான மக்கள் ஐஆர்சிடிசி ரயில்வே இணையதளத்தில் ரயில்வே டிக்கெட்களை முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் சென்னையில் ஒருவர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஹிந்தியில் குறுஞ்செய்தி வந்தது, கேரளாவில் ரயில்வே மெனுவில் குழப்பம் ஏற்பட்டது போன்ற புகார்கள் வந்துகொண்டே உள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல் ஐஆர்சிடிசி இணைய தளத்தின் சேவைகளை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இணையதளம் மூலம் ரயில்வே பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணி நடைபெற உத்தரவிடப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்?? உயர்கல்வித்துறை முக்கிய ஆலோசனை!!

இந்நிலையில் இணையதளம் மூலமாக ரயில்வே பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணி நடைபெறுவது குறித்து மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது, “ஐஆர்சிடிசி ரயில் பயணச்சீட்டு இணையதளம் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அனைத்து வித மக்களும் தங்களது ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் போது முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இணையதளம் அமைய வேண்டும்”. என அவர் தெரிவித்தார்.

பூஜ்ய கல்வியாண்டாக நடப்பு ஆண்டை அறிவிக்க திட்டம்?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

மேலும் ரயில்வே வாரியம், ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் மற்றும் ஐஆர்சிடிசி இணையதள அதிகாரிகள், இணைய தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்தனர்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!