ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC புதிய அறிமுகம்!

0
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - IRCTC புதிய அறிமுகம்!
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - IRCTC புதிய அறிமுகம்!
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC புதிய அறிமுகம்!

ரயில் பயணங்களுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கவும், ரயில் பயணிகள் பயன்பெறும் அடிப்படையில் BoB கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் IRCTC அறிவித்துள்ளது.

IRCTC அறிவிப்பு:

Indian Railway Catering and Tourism Corporation இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக தொடர்வண்டிப் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது. இந்த நிலையில் IRCTC ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியான வழியை வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் IRCTC பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

IRCTC பிஒபி ரூபே (IRCTC BoB RuPay) காண்டாக்ட்லெஸ் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கு பாங்க் ஆஃப் பரோடா ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (BFSL) உடன் IRCTC இணைந்து உள்ளது, இந்த சிறப்பு கிரெடிட் கார்டு மூலம் அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு அதிகபட்ச சேமிப்பு கிடைக்கும் . இந்த கார்டைப் பயன்படுத்தி AC ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து BoB அட்டைகளில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

1. BoB கார்டு வழங்கப்பட்ட 45 நாட்களுக்குள் ஒரு நபர் 1,000 ரூபாய் செலவழித்தால், அவர் 1,000 வெகுமதி புள்ளிகளை பெறலாம்.

2. BoB அட்டைதாரர்கள் எரிபொருள் முதல் மளிகை பொருட்கள் வரை பல வகைகளில் ஷாப்பிங் செய்வதற்கும் பல நன்மைகளை இந்த கார்டு வழங்குகிறது. இந்த கார்டை வைத்து சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு, ஜேசிபி நெட்வொர்க் ATM களுக்கும் பயன்படுத்தலாம்.

3.BoB அட்டைதாரர்கள் மொபைல் ஆப்ஸ் அல்லது ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலம் 1AC, 2AC, 3AC, CC அல்லது எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் முன்பதிவு செய்வதன் மூலம் 40 ரிவார்டு புள்ளிகளை பெறலாம்.

4.இந்த கார்டு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவீத கட்டண விலக்கு அளிக்கும்.

5. மேலும் அனைத்து எரிபொருள் பம்புகளிலும் ஒரு சதவீதம் எரிபொருள் கூடுதல் கட்டணம்.

6.மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகளில் 100 ரூபாய் செலவழித்தால், கார்டுதாரர்களுக்கு நான்கு வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். மற்ற ஒவ்வொரு வகைக்கும், இரண்டு வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். மேலும் IRCTC யில் தினசரி 7 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெறுகின்றன. BoB கிரெடிட் கார்டு அறிமுகம் ஆன பின், கண்டிப்பாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!