IRCTC-ல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்!

0
IRCTC-ல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்!
IRCTC-ல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்!
IRCTC-ல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்!

IRCTC-ல் காலியாக உள்ள சுற்றுலாத் துறை ஆலோசகர் பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் அவ்வப்போது பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்தபடி இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் IRCTCபட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள சுற்றுலாத் துறை ஆலோசகர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள்? பள்ளிகளின் அதிர்ச்சி முடிவு!

மேலும், இந்த பணியிடங்களுக்கு அதிக பட்சமாக 64 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் துறை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், சிவில் துறை சார்பான வேலையில் குறைந்தது 15 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் மாதச்சம்பளம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விருப்பமும் தகுதியும் பெற்ற பட்டதாரிகள் கூடுதல் பொது மேலாளர் (HRD), மனிதவள துறை, IRCTC லிமிடெட், 12 வது தளம், ஸ்டேட்மென்ட் ஹவுஸ், பாரகாம்பா சாலை, புது டெல்லி – 110001.என்கிற முகவரிக்கு தங்களுடைய லேட்டஸ்ட் ரெசியூம்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் அனுப்பி வைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத் துறை ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை 19ஆம் தேதி தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here