இந்தியாவில் பயணிகள் தகவலை விற்று ரூ. 1000 கோடி லாபம்? IRCTC விளக்கம்!
IRCTC நிறுவனம் பயனர்களின் மின்னணு தொகுப்பை வணிக ரீதியாக அளித்து வருவாய் ஈட்டும் வழிகள் குறித்து ஆலோசனை அளிக்க அண்மையில் ஐஆர்சிடிசி ஒப்பந்த புள்ளி கோரியது. இந்த நிலையில் இது குறித்து முக்கிய தகவல் ஒன்றை அந்நிறுவனம் அளித்துள்ளது.
IRCTC :
இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் போக்குவரத்து துறையாகும். ஏனென்றால் இதில் மற்ற போக்குவரத்து கட்டணங்களை காட்டிலும் கட்டணம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக அதிகமான மக்கள் ரயில் போக்குவரத்தையே நாடுகின்றனர். இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் பெரும்பாலான ரயில்கள் மின்சார ரயில்களாகவும், பயணிகள் ரயில்கள் சில விரைவு ரயில்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் இதனால் ரயில் கட்டணம் அதிகரிக்க கூடும் என்று நடுத்தர மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ரயில்வேயின் IRCTC நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயணிகள் தகவல் உட்பட ஐஆர்சிடிசி வசமுள்ள மின்னணு தகவல்களை பகிர்வதன் மூலம் சுமார் ஆயிரம் கோடி வருவாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் வரையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படாது என்று ஐஆர்சிடிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கான ஆலோசனை அளிக்க கோரப்பட்டுள்ள ஒப்பந்த புள்ளிக்கு வருகிற 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று ஐஆர்சிடிசி நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கமளித்த ஐஆர்சிடிசி உயரதிகாரி டிக்கெட் விற்பனை, ஓய்வறை முன்பதிவு, தங்குமிடம் முன்பதிவு, உணவு விநியோக சேவை ஆகிய வர்த்தகங்களை மேம்படுத்தவே ஆலோசனை கேட்கப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்