IRCTC ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் IRCTC ஆனது Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IRCTC |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IRCTC ரயில்வே காலிப்பணியிடங்கள்:
Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.01.2023 தேதியின் படி, அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சவுத் இந்தியன் பேங்கில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே பணிக்கான கல்வி தகுதி:
இந்திய ரயில்வேயின் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.