IRCTC 11 நாட்கள் உணவு, தங்குமிட வசதியுடன் ஆன்மிக சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்!

0
IRCTC 11 நாட்கள் உணவு, தங்குமிட வசதியுடன் ஆன்மிக சுற்றுலா - முன்பதிவு தொடக்கம்!
IRCTC 11 நாட்கள் உணவு, தங்குமிட வசதியுடன் ஆன்மிக சுற்றுலா - முன்பதிவு தொடக்கம்!
IRCTC 11 நாட்கள் உணவு, தங்குமிட வசதியுடன் ஆன்மிக சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்!

ஐஆர்சிடிசி நிறுவனம் ஆன்மீக தலங்களுக்கான 11 நாட்கள் கொண்ட சுற்றுலா திட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி சுற்றுலா:

கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டின் அனைத்து துறைகளும் நிலைகுலைந்துள்ளது. மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இதனால் மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு – மாலை நிலவரம்!

தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து சுற்றுலா தலங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி விட்டது. இதனால் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி கோவையில் ரயில் மூலம் அயோத்தி, காசி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தில் பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் அயோத்தியா, காசி, அலகாபாத், பூரி, கோனார்க் ஆகிய ஆன்மிக இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி மதுரையில் இருந்து பயணம் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே 7.5% இட ஒதுக்கீடு!

பயணம் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, சென்னை வழியாக செல்லும் மார்க்கமாக திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.11,000 கட்டணமாக கொண்ட சுற்றுலா 11 நாட்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் ரயில் பயண கட்டணம், தங்கும் வசதி (ஹால்), வாகன போக்குவரத்து, காலை, மதியம், இரவில் சைவ உணவு ஆகியவை வழங்கப்பட்டு விடும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் பயணம் நடைபெறும். சுற்றுலா குறித்த விவரங்கள் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி-ன் கோவை அலுவலகத்தை 90031 40655, 82879 31965 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!