ரூ. 80,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0

ரூ. 80,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

IRCON International Limited (IRCON) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Work Leader, CAM Engineer, Rail Welding Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 56 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IRCON International Limited (IRCON)
பணியின் பெயர் Works Leader, CAM Engineer, Rail Welding Engineer and Othe
பணியிடங்கள் 56
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2022 & 01.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON International Limited காலிப்பணியிடங்கள்:

IRCON International Limited-ல் (IRCON) காலியாக உள்ள 56 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Reference Pin Setting Engineer – 06

Works Leader – 04

Slab Track Engineer – 06

CAM Engineer – 10

Turnout Installation Engineer – 04

Rail Welding Technician – 14

Rail Welding Engineer – 02

Operator – 10

IRCON கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற அல்லது AICTE / UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma Degree அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவராக இருக்க வேண்டும்.

IRCON அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 3 வருடம் வரம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

IRCON வயது வரம்பு:

Works Leader, Rail Welding Engineer, Operator பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IRCON சம்பளம்:

Reference Pin Setting Engineer, Slab Track Engineer, CAM Engineer, Turnout Installation Engineer, Rail Welding Engineer ஆகிய பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.28,000/- முதல் ரூ.80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Works Leader, Rail Welding Technician பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.22,000/- முதல் ரூ.63,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Operator பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.19,000/- முதல் ரூ.56,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

IRCON தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Documents Verification மற்றும் Virtual Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IRCON விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி நாளுக்குள் (28.06.2022 & 1.07.2022) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம் அல்லது நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here