IRCON நிறுவனத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

IRCON நிறுவனத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது Joint General Manager/ Deputy General Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCON
பணியின் பெயர் Joint General Manager/ Deputy General Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint General Manager/ Deputy General Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Joint General Manager தகுதி:

Institute of Company Secretaries of India(ICSI) வில் Fellow/Associate Member ஆக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – தேர்வு கிடையாது!

IRCON வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 (JGM), 41(DGM) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Joint General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON விண்ணப்ப கட்டணம்:

SC/ST/EWS/PwD/Ex Serviceman தவிர மற்றவர்களுக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Joint General Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!