ககிசோ ரபாடா முதல் டேவிட் மில்லர் வரை – IPL மெகா ஏலத்தில் பங்கேற்கும் 33 தென் ஆப்ரிக்க வீரர்கள்!

0
ககிசோ ரபாடா முதல் டேவிட் மில்லர் வரை - IPL மெகா ஏலத்தில் பங்கேற்கும் 33 தென் ஆப்ரிக்க வீரர்கள்!
ககிசோ ரபாடா முதல் டேவிட் மில்லர் வரை - IPL மெகா ஏலத்தில் பங்கேற்கும் 33 தென் ஆப்ரிக்க வீரர்கள்!
ககிசோ ரபாடா முதல் டேவிட் மில்லர் வரை – IPL மெகா ஏலத்தில் பங்கேற்கும் 33 தென் ஆப்ரிக்க வீரர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் இறுதிப் பட்டியலை தற்போது BCCI வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தில் இருந்து 33 வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

IPL மெகா ஏலம்:

இந்த ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 370 இந்திய வீரர்கள் பெங்களூருவில் அதிரடியாக ஏலம் போக உள்ளனர். இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் – 17, ஆஸ்திரேலியா – 47, பங்களாதேஷ் – 5, இங்கிலாந்து – 24, அயர்லாந்து – 5, நியூசிலாந்து – 24, தென்னாப்பிரிக்கா – 33, இலங்கை – 23, வெஸ்ட் இண்டீஸ் – 34, ஜிம்பாப்வே – 1, நமீபியா – 3, நேபாளம் – 1, ஸ்காட்லாந்து – 2, அமெரிக்கா – 1 என மொத்தம் 220 வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். 2022 IPL ஏலம் வருகிற 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நாளை (பிப்.4) மீண்டும் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

IPL தொடரில் இம்முறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும், தென் ஆப்பிரிக்கா வீரர்களும் அதிகமா பங்கேற்க உள்ளனர். இதுவரை நடந்து முடிந்துள்ள 14 IPL சீசனில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர். அதில் டி வில்லியர்ஸ், மில்லர் மற்றும் ரபாடா போன்றவர்கள் லீக்கில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். தென்னாப்பிரிக்க வீரர்களில் அன்ரிச் நார்ட்ஜே ரூ. 6.50 கோடிக்கு டெல்லி அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க வீரர்களின் மொத்த பட்டியலில் 5 வீரர்கள் தங்களை ரூ. 2 கோடி அடிப்படை விலை பிரிவிலும் 4 வீரர்கள் தங்களை ரூ. 1 கோடி அடிப்படை விலை பிரிவிலும் பதிவு செய்துள்ளனர்.

IND vs WI: இந்திய அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

IPL ஏலத்தில் பங்கேற்கும் 33 தென்னாபிரிக்கா வீரர்கள்: குயின்டன் டி காக், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ககிசோ ரபாடா, டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர், டெவால்ட் ப்ரீவிஸ், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், டுவைன் பிரிட்டோரியஸ், ஹென்ரிச் கிளாசென், ஜான்லேவ் மஹாராஜ், கெஸ்லீமன் மஹாராஜ், இம்ரான் தாஹிர் ரோசோவ், மார்கண்ட் டி லாங்கே, ஜுபைர் ஹம்சா, ரியான் ரிக்கெல்டன், வெய்ன் பார்னெல், டேரின் டுபாவில்லன், டொனாவன் ஃபெரீரா, ஜெரால்ட் கோட்ஸி, நான்ட்ரே பர்கர், சிசாண்டா மாகலா, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, மிகைல் பிரிட்டோரியஸ், கார்பின் ஸ்வாவர்ட், குமெட்னெல் பெசியன்ஸ், ஓட்னெல் பெசியன்ஸ், ஜோஹன் வான் டைக்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!