IPL Countdown 2021: இந்த முறை ரஸல் ராக்கெட் வெடிக்குமா? மோர்கனின் படை தயார்!!

0
IPL Countdown 2021 இந்த முறை ரஸல் ராக்கெட் வெடிக்குமா மோர்கனின் படை தயார்!!
IPL Countdown 2021 இந்த முறை ரஸல் ராக்கெட் வெடிக்குமா மோர்கனின் படை தயார்!!

IPL Countdown 2021: இந்த முறை ரஸல் ராக்கெட் வெடிக்குமா? மோர்கனின் படை தயார்!!

ஐபிஎல் கிரிக்கெட்டில் பலமான அணியாக திகழும் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பற்றிய ஐபிஎல் அலசலை இங்கு காணலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஐபிஎல் போட்டிகளில் அதிக பலம் கொண்ட அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. வாணவேடிக்கை காட்டும் பேட்ஸ்மேன்கள் உடைய அணிகளில் மிகவும் முக்கிய இடத்தினை பெறுவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அசுர பலம் கொண்ட பேட்டிங் ஆர்டர், சூறாவளி பந்துவீச்சாளர்கள், அசத்தல் ஆல் ரவுண்டர்கள் என ஒரு சேர அமையப் பெற்ற அணியாக திகழ்கிறது. இதன் உரிமையாளர் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக் கான் ஆவார்.

IPL Countdown 2021 : முதல் கோப்பையை வெல்லுமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?!

இது வரையில் அந்த அணி 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பட்டம் வென்று உள்ளது. அதே போல் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. இது வரை அந்த அணியை கங்குலி, காலிஸ், மெக்கல்லம், காம்பிர் போன்ற ஜாம்பவான்கள் வழி நடத்தியுள்ளனர். தற்போது தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக இங்கிலாந்து ஒரு அணி கேப்டன் மோர்கன் அணியை வழி நடத்தி வருகிறார்.

கொல்கத்தா அணியின் பலமே அதன் பேட்டிங் ஆர்டர் தான். இயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், நிதிஷ் ராணா, குர்கீரத் சிங் மான், சுப்மான் கில், சுனில் நரைன், ராகுல் திரிபாதி, ஷகிப் அல் ஹசன் என பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடிக்கு கஞ்சத்தனம் செய்யாதவர்கள். குறிப்பாக ஆண்ட்ரே ரசல், நிதிஷ் ராணா, இயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக் போன்றோர் எத்தகைய பந்து வீச்சையும் நொறுக்கிடும் வல்லமை படைத்தவர்கள். ஆனால் சமீபகாலமாக அணியின் பேட்டிங் ஒரு சேர கிளிக் ஆகாததே அதன் தோல்விக்கு காரணமாக உள்ளது. ரசல் களத்தில் மட்டையை சுழற்றினால் எதிரணியின் பாடு திண்டாட்டம் தான்.

சிறந்த வீரருக்கான ஐசிசி விருது 2021 – இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தேர்வு!

சமீபத்தில் நடைபெற்ற கரீபியன் லீக் போட்டிகளில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார் ரஸல். அதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் வான வேடிக்கை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சை பொறுத்தவரை சுனில் நரைன், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி, பென் கட்டிங், டிம் சவுத்தி இவர்கள் தான் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களையும் வாரி வழங்கவும் செய்கின்றனர். தற்போது ஐபிஎல் போட்டியில் 7 போட்டிகளில் விளையாடி அதில் 2 வெற்றி மற்றும் 5 தோல்வி பெற்று பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது KKR. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் ஆறு அல்லது ஐந்திலாவது கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளதால் அனல் பறக்கும் ஆட்டங்கள் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுவரை கடந்து வந்த பாதை:
  • 2008 – லீக் சுற்று
  • 2009 – லீக் சுற்று
  • 2010 – லீக் சுற்று
  • 2011 – பிளே-ஆப் சுற்று
  • 2012 – சாம்பியன்
  • 2013 – லீக் சுற்று
  • 2014 – சாம்பியன்
  • 2015 – லீக் சுற்று
  • 2016 – பிளே-ஆப் சுற்று
  • 2017 – பிளே-ஆப் சுற்று
  • 2018 – பிளே-ஆப் சுற்று
  • 2019 – லீக் சுற்று
  • 2020 – லீக் சுற்று
  • 2021 – ??
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!