IPL Countdown 2021: கோட்டையில் கொடியேற்றுமா டெல்லி கேப்பிடல்ஸ்? ரிஷாப் பண்டின் படைபலம்!!

0
IPL Countdown 2021 கோட்டையில் கொடியேற்றுமா டெல்லி கேப்பிடல்ஸ் ரிஷாப் பண்டின் படைபலம்!!
IPL Countdown 2021 கோட்டையில் கொடியேற்றுமா டெல்லி கேப்பிடல்ஸ் ரிஷாப் பண்டின் படைபலம்!!

IPL Countdown 2021: கோட்டையில் கொடியேற்றுமா டெல்லி கேப்பிடல்ஸ்? ரிஷாப் பண்டின் படைபலம்!!

ஐபிஎல் போட்டிகளிலேயே மிகவும் வலிமையான அணிகளில் முக்கியமான அணி டெல்லி கேப்பிடல்ஸ். அதிகமான நட்சத்திர பட்டாளங்களை கொண்ட டெல்லி அணியின் ஐபிஎல் பயணத்தை இங்கு காணலாம்

கோட்டையில் கொடியேற்றுமா டெல்லி கேப்பிடல்ஸ்:

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் வருடா வருடம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடி கொண்டாடி வருகின்றனர். அதில் பங்கு கொள்ளும் 8 அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் தான் முன்னர் களமிறங்கியது. சமீபகாலமாக டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

IPL 2021: 46 பந்தில் 106 ரன்கள் விளாசல்! பயிற்சி போட்டியில் வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ்!

ஆனால் அதன் பெயர் மாற்றத்திற்கு பின் அணியின் முன்னேற்றத்திலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை பைனலிற்கே செல்லாத அணி என்ற மோசமான சாதனையை புடைத்திருந்த டெல்லி அணி கடந்த 2020ம் ஆண்டில் பைனலிற்கு சென்று அதனையும் மாற்றி அமைத்தது. சேவாக், கம்பிர் ஆகியோரின் தலைமையினை காட்டிலும் தற்போது ஷ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பண்ட ஆகியோரின் கேப்டன்ஷிப்பின் கீழ் அணி வலுவாகவே காணப்படுகிறது. கடந்த சீன்களாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

கடந்த 2020ம் ஆண்டில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவினாலும் அணியின் சீரிய ஆட்டம் இன்னும் மாறவில்லை. இந்த சீசனில் டெல்லி அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ரிக்கி பான்டிங் பயிற்சியின் கீழ் இளம் வீரர்கள் படை அனுபவ வீரர்களுக்கே சவால் விடுகிறது. பிரித்வி ஷா மற்றும் தவான் அணிக்கு தூங்க இருந்து ரன்கள் சேர்த்து வருகின்றனர். அதன் பிறகு கேப்டன் பண்ட, ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ஹெட்மயர் போன்று வலுவான பேட்டிங் தளத்தை கொண்டுள்ளது. அவர்களோடு ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டோனிஸ் போன்றோர் வலு சேர்க்கின்றனர்.

IPL 2021 திருவிழா ஆரம்பம் – போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி! 

அதே போல் பவுலிங் வரிசையில் உலகத்தரம் வாய்ந்த ரபாடா, வோக்ஸ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்றோர் உள்ளனர். அவர்களோடு தற்போது அவேஷ் கானும் வேகத்தில் மிரட்டி வருகிறார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 14 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார் அவேஷ் கான். ஒருங்கிணைந்த ஆட்டத்தை முறையாக வெளிப்படுத்தி வரும் டெல்லி அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் தயாராக உள்ளது. இரண்டாம் கட்டத்தில் தனது முதல் ஆட்டத்தை வரும் செப் 22ம் தேதி அன்று ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதுவரை கடந்து வந்த பாதை:
  • 2008 – பிளே-ஆப் சுற்று
  • 2009 – பிளே-ஆப் சுற்று
  • 2010 – லீக் சுற்று
  • 2011 – லீக் சுற்று
  • 2012 – பிளே-ஆப் சுற்று
  • 2013 – லீக் சுற்று
  • 2014 – லீக் சுற்று
  • 2015 – லீக் சுற்று
  • 2016 – லீக் சுற்று
  • 2017 – லீக் சுற்று
  • 2018 – லீக் சுற்று
  • 2019 – பிளே-ஆப் சுற்று
  • 2020 – ரன்னர்
  • 2021 – ??
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!