IPL திருவிழா 2021: சுழன்றடிக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் சூறாவளிகள்!!

0
IPL திருவிழா 2021 சுழன்றடிக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் சூறாவளிகள்!!
IPL திருவிழா 2021 சுழன்றடிக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் சூறாவளிகள்!!

IPL திருவிழா 2021: சுழன்றடிக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் சூறாவளிகள்!!

IPL போட்டிகளில் அசைக்க முடியாத அணியான மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட காத்துள்ளது. அந்த அணி பற்றிய ஐபிஎல் அலசலை இங்கு ஆராயலாம்.

மும்பை இந்தியன்ஸ்:

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை கோப்பை வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ். இதுவரையில் அந்த அணி 5 முறை கோப்பையை தனதாக்கியுள்ளது. அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை சரியான அணிக்கலவை கொண்டுள்ளது. கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் இந்த அணியை முன்னர் வழிநடத்தினார். தற்போது இந்திய வீரர் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துகிறார்.

IPL திருவிழா 2021 : டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமனம்!

மும்பை அணியின் மிகப்பெரிய பலமே அந்த அணியின் அதிரடி பேட்டிங் வரிசை தான். துவக்கம் முதல் கடைசி நிலை வரை அனைவருமே மட்டையை சுழற்றுவதில் வல்லவர்கள். ரோஹித் சர்மா, டி காக், சூரியகுமார் யாதவ், பொல்லார்ட், இஷான் கிஷன், பாண்டியா சகோதரர்கள் வரை அனைவரும் பேட்டிங்கில் எதிரணியை சிதறடித்து விடுவர். அதே போல பந்து வீச்சிலும் பும்ராஹ், ராகுல் சாகர், ட்ரெண்ட் போல்ட், என்ற உலக தரம் வாய்ந்தவர்கள் உள்ளனர். கிறிஸ் லின், சவுரப் திவாரி போன்றோரும் அணியில் உள்ளனர்.

டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் தான் இணைந்துள்ளார். இது வரை 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து முறை கோப்பை வென்று அசைக்க முடியாத வலிமையில் உள்ளது. இதுவரை உள்ள ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சேசிங் சாதனை (14.4 ஓவர்களில் 197 ரன்கள்) மும்பை அணியிடமே உள்ளது. அதிக வெற்றி சதவீதத்தில் சென்னைக்கு அடுத்த இடத்தில் உள்ளது மும்பை அணி. தற்போதும் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இன்னும் 7 போட்டிகளில் 4 வெற்றி பெற வேண்டும் என்பதனால் கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து – கடைசி நிமிட முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

கடைசி இரன்டு சீசன்களிலும் மும்பை அணியே கோப்பை வென்றது. இந்த முறையும் வென்று ஹாட்டிரிக் சாதனை படைக்க வீரர்கள் உத்வேகத்துடன் உள்ளனர். நாளை (செப் 19) தொடங்க உள்ள முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.

இதுவரை கடந்து வந்த பாதை:

2008 – லீக் சுற்று
2009 – லீக் சுற்று
2010 – பிளே-ஆப் சுற்று
2011 – பிளே-ஆப் சுற்று
2012 – பிளே-ஆப் சுற்று
2013 – சாம்பியன்
2014 – பிளே-ஆப் சுற்று
2015 – சாம்பியன்
2016 – லீக் சுற்று
2017 – சாம்பியன்
2018 – லீக் சுற்று
2019 – சாம்பியன்
2020 – சாம்பியன்
2021 – ??

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!