IPL 2025 Mega Auction : சென்னை, மும்பை வாங்கிய வீரர்கள் லிஸ்ட் இதோ.. விவரம் உள்ளே!!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது இருந்தே அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடருக்கான மெகா ஏலம் நேற்று (நவம்பர் 24) சவூதி அரேபியா நாட்டின் ஜெட்டாவில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) ஏலத்தில் எடுத்த வீரர்களை காணலாம். நூர் அகமது – ரூ.10 கோடி, அஸ்வின் – ரூ.9.75 கோடி, கான்வே – ரூ.6.25 கோடி, சையது கலீல் அகமது – ரூ.4.80 கோடி, ரச்சின் ரவீந்திரா – ரூ.4 கோடி, ராகுல் திரிபாதி – ரூ.3.40 கோடி, விஜய் சங்கர் – ரூ.1.20 கோடி.
இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி, டிரென்ட் போல்ட் – ரூ.12.50 கோடி, நமன் திர் – ரூ. 5.25 கோடி, ராபின் மின்ஸ் – ரூ.65 லட்சம், கரண் சர்மா- ரூ.50 லட்சம் ஆகிய வீரர்களை ஏலத்தில் வாங்கி உள்ளது. இந்நிலையில் 2-வது நாள் ஏலம் இன்று (நவம்பர் 25) நடக்கிறது. முதல் நாள் ஏலத்தில் 72 வீரர்கள் விற்பனை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
























