IPL விழாக்கால சலுகை – டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் Airtel, Vi & Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

0
IPL விழாக்கால சலுகை - டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் Airtel, Vi & Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
IPL விழாக்கால சலுகை - டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் Airtel, Vi & Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
IPL விழாக்கால சலுகை – டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் Airtel, Vi & Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

தற்போது ரசிகர்கள் கொண்டாடி வரும் IPL போட்டிகளை டிஸ்னி+ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் சில ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இது பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ப்ரீபெய்ட் திட்டங்கள்

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26, 2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டங்களை டிஸ்னி+ஹாட்ஸ்டார் OTT தளம் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஒளிபரப்பாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் ஐபிஎல் லைவ் ஸ்ட்ரீமை அணுக ஒருவர் OTT தளத்தில் பணம் செலுத்தும் சந்தாதாரராக இருக்க வேண்டும். இப்போது டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை பெற ஒருவர் திட்டமிட்டிருந்தால், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாக சில ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் வழங்குகிறது.

சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

அந்த வகையில், ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.499 முதல் ரூ.1599 வரையிலும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. அதன்படி, வருடத்திற்கு ரூ.499 மதிப்புடைய ‘மொபைல்-மட்டும்’ திட்டத்திற்கு இது வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயனர்கள் ஒரு நேரத்தில் ஒரு மொபைல் ஃபோனில் மட்டுமே அணுக முடியும். இருப்பினும், இலவச உள்ளடக்கத்தை இணையதளம், ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் சாதனங்கள் உட்பட அனைத்து தளங்களிலும் பார்க்க முடியும். இதன் அதிகபட்ச ஸ்ட்ரீமிங் தெளிவுத்திறன் 720p ஆகும்.

இப்போது ஏர்டெல் ரூ.1199 மற்றும் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மூலம், ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன், மாதத்திற்கு ரூ.199க்கான நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை சந்தாவையும் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளவும். ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு வரும்போது, ஏர்டெல் டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு அதே மொபைல் சந்தாவை பல ரீசார்ஜ் விருப்பங்களுடன் வழங்குகிறது. குறிப்பாக ரூ.3359, ரூ.2999, ரூ.839, ரூ.838, ரூ.599 மற்றும் ரூ.499 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சேவைக்கான அணுகலை உள்ளடக்கியது.

இதில் ரூ.599 திட்டத்தில் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.499 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏர்டெல்லைப் போலவே, வோடபோன்-ஐடியா (Vi) நிறுவனமும் ஒரு வருட டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுக்கான அணுகலை வழங்குகிறது. அந்த வகையில் Disney+Hotstar சந்தாவை அணுகக்கூடிய ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.601, ரூ.499, ரூ.901, ரூ.1066 மற்றும் ரூ.3099 ஆகும். இதில் ரூ.499 பேக் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ரூ.901 திட்டம், 70 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

Vi இன் போஸ்ட்பெய்ட் திட்டங்களில், RedX இன் கீழ் மாதத்திற்கு ரூ.1099 இல் தொடங்கும் திட்டங்கள் Disney+Hotstarக்கான ஒரு வருட மொபைல் சந்தாவை தருகிறது. இருப்பினும், இந்த திட்டங்களில் ஒரு வருடத்திற்கு Netflix மற்றும் Amazing Prime அணுகலும் அடங்கும். அடுத்தபடியாக, டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இணைக்கும் பல திட்டங்களை ஜியோவும் கொண்டுள்ளது. இதற்கான ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ. 499, ரூ. 601, ரூ. 799, ரூ. 1066 மற்றும் ரூ. 3119 ஆகும். ஜியோ தனது வருடாந்திர 2.5 ஜிபி திட்டத்தில் இந்த OTT இயங்குதளத்திற்கான அணுகலை வழங்குகிறது. இது இப்போது ரூ. 2,999க்கு கிடைக்கிறது.

தமிழக பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? கல்வித்துறை பரிசீலனை!

ஜியோவின் ரூ.555 மற்றும் ரூ.659 மதிப்புள்ள டேட்டா பேக்குகளும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சேவைக்கான அணுகலுடன் வருகின்றன. ஆனால் ரூ. 1499 மதிப்புள்ள Disney+Hotstar இன் ‘பிரீமியம்’ பதிப்பிற்கான அணுகலை வழங்கும் ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே. இந்த பிரீமியம் சந்தா விளம்பரங்கள் இல்லாதது மற்றும் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இருந்து சேவையை அணுக பயனர்களை அனுமதிக்கிறது. ஜியோவின் ரூ.1499 மற்றும் ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதற்கான அணுகலை வழங்குகின்றன. இதனுடன் ஒரு பயனர் ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறினாலும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை அவர்கள் தொடரலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!