IPL 2022: ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு! காரணம் என்ன?

0
IPL 2022: ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு! காரணம் என்ன?
IPL 2022: ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு! காரணம் என்ன?
IPL 2022: ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு! காரணம் என்ன?

பெங்களூருவில் தற்போது நடைபெற்று வரும் 2022ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிக்கான ஏலத்தை நடத்தி வந்தவர் திடீரென மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக காணலாம்.

IPL ஏலம்

ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு 15வது முறையாக துவங்க இருக்கிறது. இந்த சீசனில் லக்னோ மற்றும் குஜராத் உள்ளிட்ட 2 புதிய அணிகள் இணைந்திருக்க மொத்தம் 10 அணிகள் IPL போட்டிகளில் களம் காண உள்ளது. இப்போது IPL 2022 போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான மெகா ஏலம் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 2 வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதே நேரத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை ஒரு வீரரை கூட ஏலத்தில் எடுக்கவில்லை.

EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் மாற்ற எளிய வழிமுறைகள்!

இந்நிலையில் இந்த ஏலத்தை நடத்தி வந்த ஹக் எம்மாண்டஸ் என்பவர் தீடீரென மயங்கி விழுந்ததால் மற்ற செயல்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, IPL ஏலம் நடைபெற்று வந்து கொண்டிருக்கும் வேளையில், சரியாக 2:19 மணியளவில் ஏலதாரர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் அங்கு சில நேரம் பதட்டமான சூழல் நிலவியது. இப்போது IPL ஏலத்தில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டிருப்பதால் ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

இந்நிலையில் ஏலத்தில் இருந்து வெளிவந்துள்ள சில தகவல்களின் படி, ஹக் எம்மாண்டஸ் அவர்களுக்கு சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை கொடுத்து வரும் நிலையில் அவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பதனால் தான் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு இடைவேளை முடித்து மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் மெகா ஏலம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ஏலமானது தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!