IPL 2022: LSG vs GT போட்டி கணிப்பு – இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!

0
IPL 2022: LSG vs GT போட்டி கணிப்பு - இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!
IPL 2022: LSG vs GT போட்டி கணிப்பு - இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!
IPL 2022: LSG vs GT போட்டி கணிப்பு – இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!

IPL 2022 சீசனில் இன்று (மே.10) நடைபெற இருக்கும் பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான கணிப்பு, மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

போட்டி கணிப்பு

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக்கின் 57வது ஆட்டம் புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் வைத்து இன்று (மே.10) நடைபெற இருக்கிறது. இந்த பரபரப்பான ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் மோதவிருக்கின்றன. அந்த வகையில் இந்த சீசனின் அறிமுக அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரண்டும் திறமையான வீரர்கள் கொண்ட படை பலத்துடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்தாலும் இன்னும் நல்ல நிலையில் உள்ளது.

Exams Daily Mobile App Download

மறுபக்கத்தில் KL ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அவர்கள் இன்னும் வலிமையுடன் களமிறங்குவார்கள். இப்போது ஒரே புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் எந்த அணி அடுத்த வெற்றியை பெற்று பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் 2022ல் LSG மற்றும் GT அணிகள் ஒன்றுக்கொன்று எதிராக விளையாடின. அந்த போட்டியில் GT அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் LSG அணி குஜராத்தை பழி தீர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LSG vs GT மேட்ச் கணிப்பு:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் Vs குஜராத் டைட்டன்ஸ்

மேட்ச் – 57

வெற்றி வாய்ப்பு:

டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம். ஐபிஎல் 2022ல் சேஸிங் செய்வது நல்ல தேர்வாக இருப்பதால் டாஸ் வென்ற பிறகு சேஸ் செய்வதை பல அணிகள் தேர்வு செய்துள்ளன. இருப்பினும், முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் இதுவரை கணிசமான எண்ணிக்கையிலான ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக ஐபிஎல் 2022ல் LSG vs GT மோதலின் போது, GT இரண்டாவது பேட்டிங் செய்த போட்டியில் வெற்றி பெற்றது.

LSG vs GT போட்டிக்கான கணிக்கப்பட்ட மதிப்பெண்கள்

1வது இன்னிங்ஸ்: LSG 160-180 150-170

2வது இன்னிங்ஸ்: GT 160-180 150-170

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே-ஆப்களுக்கு தகுதி பெற ஒரேயொரு வாய்ப்பு!

உத்தேச XI அணி:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

குயின்டன் டி காக் (WK), கேஎல் ராகுல் (C), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மொஹ்சின் கான்

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் சாஹா (WK), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், லாக்கி பெர்குசன், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!