IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7,000+ ரன்களை கடந்து ‘தல’ தோனி புதிய சாதனை!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 7,000+ ரன்களை கடந்து 'தல' தோனி புதிய சாதனை!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 7,000+ ரன்களை கடந்து 'தல' தோனி புதிய சாதனை!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7,000+ ரன்களை கடந்து ‘தல’ தோனி புதிய சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்எஸ் தோனி நேற்று (மார்ச்.31) நடைபெற்ற IPL ஆட்டத்தில் டி20 போட்டியில் 7,000 ரன்களை கடந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் எலைட் பட்டியலில் இணைந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த ஆண்டிற்கான 15வது IPL போட்டிகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போட்டிகளில் பல அணிகள் தங்களுக்கான வெற்றி வாய்ப்பை பெறுவதில் முழு ஈடுபாடு காட்டி வருகிறது. இப்படி இருக்க நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது 2 ஆட்டங்களில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி இருக்கிறது. முதல் ஆட்டத்தில் வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்த CSK அணியை KKR புரட்டி போட்டது. இதனையடுத்து நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் கூட 210 ரன்களை எடுத்து வியக்க வைத்திருந்த CSK அணியை LSG அசால்டாக பந்தாடியது.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – இன்றைய ஆட்டத்திற்கான உத்தேச XI அணி விவரம்!

இந்த தொடர் தோல்வியினால் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் CSK அணியின் கேப்டன் தோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. குறிப்பாக, தோனி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து சென்னை அணியின் மிகப்பெரிய ஸ்கோரைப் பதிவு செய்ய உதவினார். சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சத்தமே இல்லாமல் கேமியோ சாதனை புத்தகத்தில் அவரது பெயரை பதிவு செய்திருக்கிறார் ‘தல’ MS தோனி.

IPL 2022 CSK vs LSG: Dream11 & போட்டி கணிப்பு – உத்தேச XI அணி!

அதாவது T20 கிரிக்கெட் வடிவத்தில் MS தோனி 7,000 ரன்களை கடந்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றதுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் எலைட் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் ஏற்கனவே CSK அணியின் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் இடம்பிடித்துள்ளனர். இது தவிர தோனி, 2007 உலக சாம்பியனுக்காக 1,617 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய தோனி 123 ரன்கள் குவித்திருந்தார். அந்த வகையில் T20 குறுகிய வடிவத்தில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி ஐபிஎல்லில் இதுவரை 222 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!