IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கடுமையான பயிற்சியில் வீரர்கள்!

0
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கடுமையான பயிற்சியில் வீரர்கள்!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கடுமையான பயிற்சியில் வீரர்கள்!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கடுமையான பயிற்சியில் வீரர்கள்!

கடந்த 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வீரர்கள் SRH அணிக்கு எதிரான முக்கியமான மோதலுக்கு முன்பு தற்போது கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த ஆண்டிற்கான IPL லீக்கின் முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த முறை கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் ஒரு மோசமான துவக்கத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் முதல் மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்த CSK அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த அணியை பொறுத்தமட்டில், தோனி, ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ், ராயுடு உட்பட பல திறமையான வீரர்கள் இருக்கும் போதிலும் ஏதோவொரு இடத்தில் வெற்றிடம் காணப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 23, 24ம் தேதி கருத்தரங்கம்!

ஒரு சில ஆட்டத்தில் பேட்டிங் பிரிவு சொதப்பினால், மற்ற ஆட்டத்தில் பவுலிங் பிரிவில் தடுமாற்றம் காணப்பட்டு வருகிறது. இந்த தோல்வி பட்டியல் இப்படியே நீண்டு கொண்டு போனால் சீக்கிரமே லீக் சுற்றில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போது ரவீந்திர ஜடேஜா தலைமையிலான CSK அணி அடுத்ததாக வரும் சனிக்கிழமையன்று SRH அணியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வலைகளில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

IPL 2022 KKR vs MI: Dream11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் & பிளேயிங் XI விவரம் இதோ! இன்றைய ஆட்டம்!

இது தொடர்பாக CSK நிர்வாகம் ஒரு வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் MS தோனி, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ராபின் உத்தப்பா போன்றவர்கள் நல்ல ஃபார்மில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆக்ரோஷத்தை போட்டியில் காட்டினால் CSK அணிக்கு வெற்றி நிச்சயம் என ரசிகர்கள் கருதுகின்றனர். இதுவரை ஐபிஎல் 2022 போட்டிகளில் சென்னை அணிக்காக பேட் செய்து சிறந்த வீரராக சிவம் துபே உருவெடுத்துள்ளார். அந்த வகையில் அவர் மூன்று போட்டிகளில் விளையாடி 165.15 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 109 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சு பிரிவில், டுவைன் பிராவோ ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

CSK அணி:

ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்.எஸ். தோனி (WK), ரவீந்திர ஜடேஜா (C), சிவம் துபே, தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, கே.எம். ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, என்.ஜெகதீசன், சுப்ரான்ஷு சேனாபதி , முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிரிட்டோரியஸ், டெவோன் கான்வே, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here