IPL 2022 தொடர் குறித்த சிறப்பு தொகுப்பு – முழு விவரங்கள் இதோ!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் தேதி, நேரம், வீரர்கள், புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணி பட்டியல், மற்றும் 10 அணிகளின் மீதமுள்ள ஏலத்தொகை ஆகியவற்றை குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்
சிறப்பு தொகுப்பு:
ஐபிஎல் 2022 ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இரண்டு புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்த்து, ஐபிஎல் 2022 யில் மொத்தம் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. போட்டிக்கு முன்னதாக 8 அணிகளும் தங அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டது. மும்பை இந்தியன்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.
சென்னை: சவரனுக்கு ரூ.328 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில் புதிதாக விளையாடும் அணிகளுக்கு யார் கேப்டனாக வழிநடத்துவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இதை தொடர்ந்து அகமதாபாத் பிரான்சிஸ் அணி IPL தொடரில் இதற்கு முன் சிறப்பாக விளையாடிய 3 வீரர்களை குறிவைத்துள்ளது. மேலும் லக்னோ அணி ஆஸ்திரேலியா வீரர் ஸ்டோனிஸ் 9.2 கோடிக்கும் ,ரவி பிஷ்நோய் 4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அகமதாபாத் அணி ரஷித் கான் ,கில் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
தமிழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு 2022 – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 27 தொடக்க ஆட்டத்திற்கான தற்காலிக தேதியாகும். போட்டிக்கான மைதானமாக மும்பை மற்றும் புனேவை பிசிசிஐ இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், மும்பையில் உள்ள கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் பிப்ரவரி 20 ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று BCCI தெரிவித்துள்ளது. மேலும், பிசிசிஐ போட்டியை நடத்துவதற்கு தென்னாப்பிரிக்காவை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.