
IPL 2022: யுவராஜ் சிங் முதல் கேஎல் ராகுல் வரை – IPL வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்தியர்கள்!
ஐபிஎல் 2022 ஏலம் இந்த மாதம் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில் IPL போட்டி வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 8 இந்திய வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
IPL ஆக்க்ஷன்:
பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 590 வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் 2022 ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனையைத் தொடங்கியுள்ள நிலையில், யார் யார் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இம்முறை புதிதாக 2 அணிகள் இடம்பெற்றுள்ளதால் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் IPL போட்டி வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 8 இந்திய வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
TN Job “FB
Group” Join Now
2015 ஐபிஎல் ஏலத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் நட்சத்திர இந்திய ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது அந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்ததாக அமைந்தது. இதற்கு முன் முந்தைய ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் யுவராஜை 14 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 2014 இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 12.5 கோடி ரூபாய்க்கு தினேஷ் கார்த்திக்கை எதிர்பாராத விதமாக ஒப்பந்தம் செய்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் இத்தொடரில் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. இருப்பினும் RCB 2015 ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை10.5 கோடிக்கு வாங்கியது, அவரை சிறந்த வீரர்களில் ஒருவராக மாற்றியது.
Post office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
2011 ஆம் ஆண்டு கம்பீர் தனது சொந்த அணியான டெல்லிக்கு கேப்டனாக இருந்த பிறகு, நைட் ரைடர்ஸால் 11.4 கோடிக்கு வாங்கப்பட்டார். இதையடுத்து 2017 ஆம் ஆண்டு ஏலத்தில் ஜெய்தேவ் உனத்கட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் 11.5 கோடிக்கு வாங்கியது. 2018 ஐபிஎல் ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் ராகுலை வாங்க ஆர்வமாக இருந்தன . இறுதியில் KXIP அணி ராகுலை 11 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதே ஏலத்தில் மணீஷ் பாண்டேவும் அதே தொகைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. ராபின் உத்தப்பா 2011 இல் புனே வாரியர்ஸால் 9.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு ஆல் ரவுண்டர் ஜடேஜா 9.8 கோடிக்கு CSK அணிக்கு ஏலம் போனார்.