IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்!

IPL 2022 போட்டிகளில் அதிகளவு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இடம்பிடித்துள்ள 25 வீரர்களில் உத்தேச XI அணிக்கான பட்டியல், அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்த சில விவரங்களை இப்பதிவில் காணலாம்.

CSK அணி

சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிக்கான மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வழக்கமாக செய்வதை இந்த முறையும் செய்து அணியின் மீதான நம்பிக்கையை காப்பாற்றி இருப்பதாக கருத்துக்கள் எழுந்திருக்கிறது. அதாவது, நடப்பு சாம்பியனான CSK அணி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் வலிமை மிக்க அணியாக கருதப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது இந்த அணியில் சில சொதப்பல்கள் நடந்தாலும், அதனை சரி செய்து முறையாக நிர்வகித்து, வெற்றிக் கோப்பையை பிடிப்பதில் இந்த அணி முனைப்புடன் செயல்படுவது உண்டு.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!

அந்த வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இதுவரை 4 முறை IPL கோப்பைகளை வென்றுள்ளது. இதற்கு அணியில் உள்ள வீரர்களின் பங்களிப்பு மிகப்பெரிய காரணமாகும். இம்முறையும் சிறப்பான 25 வீரர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2022 IPL போட்டிகளில் களம் காண இருக்கிறது. இந்த அணியில் சில முக்கியமான வீரர்கள் மிஸ் செய்யப்பட்டிருந்தாலும் அதே அளவு பலம் கொண்ட வீரர்களுடன் புதிய CSK அணி உருவாகி உள்ளது. குறிப்பாக CSK அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்திருந்த ஷர்துல் தாக்கூர், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் அணியை விட்டு விலகி உள்ளனர்.

மார்ச் 1ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

தவிர, IPL மெகா ஏலத்தில் CSK அணி, சுரேஷ் ரெய்னாவை எடுக்காதது கூட பெரிய அளவில் பேசப்பட்டது. இருந்தாலும் CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் தோனியை பொறுத்தவரையில், இருக்கும் வீரர்களில் சிறந்ததை சிறப்பாக பயன்படுத்துவது அணிக்கு பலம் என்பதை முழுமையாக நம்புகின்றனர். இப்போது அணியில் டு பிளெசிஸ் இல்லாததால், டெவோன் கான்வே சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதே போல ஷிவம் துபே, தீபக் சாஹர் ஆகியோர் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது.

இப்போது IPL 2022க்காக CSK அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழு பட்டியலின் படி,

  • ருதுராஜ் கெய்க்வாட்
  • டெவோன் கான்வே
  • மொயீன் அலி
  • அம்பதி ராயுடு
  • சிவம் துபே
  • MS தோனி
  • ரவீந்திர ஜடேஜா
  • கிறிஸ் ஜோர்டான்
  • தீபக் சாஹர்
  • ஆடம் மில்னே
  • ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
  • ராபின் உத்தப்பா
  • டிஜே பிராவோ
  • துஷார் தேஷ்பாண்டே
  • சிமர்ஜீத் சிங்
  • டுவைன் பிரிட்டோரியஸ்
  • மிட்செல் சான்ட்னர்
  • மகேஷ் தீக்ஷனா
  • சுப்ரான்ஷு சேனாபதி
  • பிரசாந்த் சோலங்கி
  • முகேஷ் சவுத்ரி
  • சி.ஹரி நிஷாந்த்
  • என். ஜெகதீசன்
  • ஆசிஃப்
  • கே.பகத் வர்மா

உத்தேச XI அணி:

டெவோன் கான்வே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், MS தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, மொயீன் அலி, தீபக் சாஹர், மில்னே, ஜோர்டான் ஆகியோர் உத்தேச XI அணியில் இடம்பெற்றுள்ளனர்.

CSK அணியின் பலம் & பலவீனம்:

CSK அணிக்கு மிகப்பெரிய பலம் என்றால் அது எம் எஸ் தோனி தான். அவர் ஆட்டத்தின் வடிவமைப்பை நன்கு அறிந்தவர் மற்றும் அதனை புரிந்துகொள்பவர். இவரை பொருத்தளவு, அணியில் இருக்கும் வீரர்களிடம் இருந்து சரியான விஷயங்களை கேட்டு அதற்கேற்றவாறு ஆரம்பத்தில் விதிகளை அமைத்து, ஒவ்வொரு வீரருக்கும் வாய்ப்புகளை அளிப்பது, திட்டத்தில் சில விலகல்களை சந்தித்தால் அதற்கேற்றவாறு வீரர்களை நன்கு தயார் செய்து அணிக்கு தேவையான செயல்திறனை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர். தவிர இந்த அணியின் மற்றுமொரு பலம் என்னவென்றால், வீரர்கள் அழுத்தத்திற்கு எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பது தான்.

பொதுவாக விளையாடும் நேரங்களில் மற்ற சில அணிகள் பீதியடைந்தாலும், CSK அணி தங்கள் நிலையை உயர்த்துவதற்கான வழியை கண்டுபிடித்து சிறப்பாக செயல்படும். அதே போல இந்த அணியில் பல அனுபவசாலிகளும் உள்ளனர். வீரர்களை பொருத்தளவு, கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அவர் அதே பாணியில் தொடர முடியும் என CSK நம்புகிறது. அந்த வகையில் CSK அவரை தக்கவைத்திருப்பது தோனியின் நம்பிக்கையை அவர் பெற்றுள்ளார் என்பதை காட்டுகிறது. அடுத்ததாக, ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். கடந்த சீசனில் அவரது பேட்டிங் மிக சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக அவரது பீல்டிங் உலகத் தரம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

பலவீனங்கள்:

CSK அணியில் டாப் ஆர்டர் பெரும்பாலும் வரிசைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும், வரும் சீசனில் அவர்கள் இன்னிங்ஸை எப்படி முடிக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. தோனி முன்பு இருந்த ஃபினிஷர் போல அல்ல. அவரது ஆட்டத்தில் வித்தியாசம் காணப்படுகிறது. மேலும் ஷிவம் துபேயும் இந்த விஷயத்திலும் மிகவும் சீரற்றவராக இருக்கலாம். ஜடேஜா பேட்டிங் செய்யலாம் ஆனால் அவருக்கு போதுமான பார்ட்னர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – அடுத்த கட்டத்திற்கு நகரும் கதை!

பொதுவாக T20 கிரிக்கெட்டில் ஆட்டத்தை நன்றாக முடிப்பது பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் CSK அணி அந்த அம்சத்தில் கொஞ்சம் சறுக்கலை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதே போல வேகப்பந்து வீச்சு வரிசையும் சற்று சந்தேகத்திற்குரியதாக தெரிகிறது. ஆடம் மில்னே சிறப்பாக விளையாட முடிந்தாலும், கிறிஸ் ஜோர்டானின் IPL நிலைத்தன்மையை காண முடியவில்லை. அதனால், CSK அணி ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு பதிலாக, பவுலிங் நிலைகளை ஓரளவு உயர்த்த வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!