IPL 2022: லீக் போட்டியில் இருந்து வெளியேறும் சென்னை சூப்பர் கிங்ஸ்? முன்னாள் இந்திய வீரர் எச்சரிப்பு!

0
IPL 2022: லீக் போட்டியில் இருந்து வெளியேறும் சென்னை சூப்பர் கிங்ஸ்? முன்னாள் இந்திய வீரர் எச்சரிப்பு!
IPL 2022: லீக் போட்டியில் இருந்து வெளியேறும் சென்னை சூப்பர் கிங்ஸ்? முன்னாள் இந்திய வீரர் எச்சரிப்பு!
IPL 2022: லீக் போட்டியில் இருந்து வெளியேறும் சென்னை சூப்பர் கிங்ஸ்? முன்னாள் இந்திய வீரர் எச்சரிப்பு!

நேற்று (ஏப்ரல்.3) பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த IPL போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இது லீக் போட்டியில் இருந்து CSK அணி வெளியேறுவதற்கான வாய்ப்பு என்று முன்னாள் இந்திய வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

தொடர்ச்சியாக மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை 2021ம் சீசனில் எம்எஸ் தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்றதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்திருக்கிறது. அந்த வகையில், ஐபிஎல் முழு வரலாற்றிலும் CSK அணி முதல் முறையாக பிளேஆஃப்களுக்கு செல்லத் தவறிய 2020ம் ஆண்டுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இப்போது இன்னும் ஒரு போட்டியில் CSK அணி தோல்வியடைந்தால் சீக்கிரமாகவே லீக் போட்டியை விட்டு வெளியேறும் என்று முன்னாள் இந்திய பவுலர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார்.

IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 11வது போட்டிக்கான பிளேயிங் 11 அணி!

இந்த சீசனில் பத்து அணிகள் களமிறங்கியுள்ள நிலையில், CSK அணி பிளே ஆஃப் சுற்றுக்கு வருவதற்கான சமன்பாடு கடினமாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆர்பி சிங் கூறும் போது, ‘எப்படியும் மூன்று போட்டிகளில் தோல்வியடைவது அவர்களது கடினமான நேரத்தைக் காட்டுகிறது. ஆனால் இன்னும் ஒரு போட்டியில் தோற்றால், அவர்கள் முதல் 4 இடங்களை பெறுவதை பார்ப்பது மிகவும் கடினம். ஏனென்றால் மோசமான நிகர ரன் ரேட் மற்றும் குறைவான எண்ணிக்கையுடன் CSK பின்தங்கியுள்ளது. இருப்பினும் இன்னும் விளையாட வேண்டிய போட்டிகள் நிறைய உள்ளன.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணிக்கு திரும்பும் தீபக் சாஹர்?

இப்போது 10 அணிகளுடன் ஒரு குழு முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கு எவ்வளவு புள்ளிகளைப் பெற வேண்டும் என்பது கூட தெரியவில்லை. டாப் ஆர்டராக இருந்தாலும் சரி மிடில் ஆர்டராக இருந்தாலும் சரி, அந்த ஒரு பார்ட்னர்ஷிப்பை தவிர நாம் பார்த்துப் பழகிய சிஎஸ்கேயை இன்று பார்க்கவில்லை. அதனால் அவர்களால் திட்டமிட்டு ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது போல் தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். இதற்கிடையில் நேற்று (ஏப்ரல்.3) பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் தனது அபார பந்துவீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!