சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டியில் KKR உடன் மோதல்!
வரும் மார்ச் மாதம் துவங்க இருக்கும் IPL 2022 போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே ஆரம்பமாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
IPL போட்டிகள்:
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. அந்த வகையில் IPL போட்டிகளின் 15வது சீசனில் 10 அணிகள் கலந்துகொள்ள இருக்கிறது. இதனால் இந்த சீசனை A மற்றும் B என 2 குழுக்களாக பிரித்து போட்டிகளை நடத்த BCCI முடிவு செய்துள்ளது. இப்போது இந்த 2 குழுவில் இடம்பெறுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை போட்டியிட இருக்கிறது. அதே நேரத்தில் இந்த IPL சீசனின் மொத்த போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே நடத்தப்பட இருக்கிறது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாள்!
அந்த வகையில் இந்த சீசனில் மொத்தம் 55 போட்டிகள் மும்பையில் வைத்து நடத்தப்பட இருக்கிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் 15 போட்டிகள் நடைபெறவுள்ளன. மீதியுள்ள போட்டிகள் வான்கடே ஸ்டேடியம், கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவின் பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட இருக்கிறது. அதே போல பிளேஆஃப்கள் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
மார்ச் 1ம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இப்போது மார்ச் மாதம் 26ம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கும் இந்த சீசனுக்கான முதல் போட்டி, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் ஆரம்பமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் மும்பையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், போட்டிகளுக்கான சரியான நேரத்தில் இடங்களை அடையவும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் விஐபி இயக்கம் போன்ற சிறப்பு “கிரீன் சேனல்” அனுமதியை வழங்குவதாக மகாராஷ்டிரா அரசு உறுதி செய்துள்ளது.