IPL 2021: SRH vs RR இன்று பலப்பரீட்சை! பிட்ச் ரிப்போர்ட் & உத்தேச அணி விவரம்!

0
IPL 2021 SRH vs RR இன்று பலப்பரீட்சை! பிட்ச் ரிப்போர்ட் & உத்தேச அணி விவரம்!
IPL 2021 SRH vs RR இன்று பலப்பரீட்சை! பிட்ச் ரிப்போர்ட் & உத்தேச அணி விவரம்!

IPL 2021: SRH vs RR இன்று பலப்பரீட்சை! பிட்ச் ரிப்போர்ட் & உத்தேச அணி விவரம்!

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், உத்தேச அணி விவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு தகவல்களை இங்கு காணலாம்.

SRH vs RR இன்று பலப்பரீட்சை:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 40வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கோதாவில் இறங்க உள்ளன. இரண்டு அணிகளுமே தோல்விகளால் துவண்டு போயுள்ளன. வெற்றி பாதைக்கு திரும்புவதற்கு இரு அணிகளும் போராடி வருகின்றன. ராஜஸ்தான் அணி இதுவரை 9 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அதில் 4 வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். டெல்லிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் பேட்டிங்கில் தடுமாற்றம் காணப்பட்டது.

IPL 2021: RCB vs MI – 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அசத்தல் வெற்றி!!

இதனால் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். கேப்டன் சாம்சன் தவிர யாரும் அந்த போட்டியில் ஜொலிக்கவில்லை என்பதனால் அணியில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் 1 வெற்றி மற்றும் 8 தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக தோல்விகளால் துவண்டு உள்ள அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. இதனால் கடைசி இடத்தில் இருந்து மேலேறிட முயற்சிக்கும். மேலும் வெற்றி பாதைக்கு திரும்பவும் போராடும்.

வாழ்வா, சாவா கட்டத்தை நோக்கி ராஜஸ்தான் அணி நகருவதால் இன்றைய ஆட்டத்தில் அதிரடிக்கு குறைவிருக்காது. இவ்விரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

IPL 2021: CSK vs KKR – 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை த்ரில் வெற்றி!!

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி நடக்க இருக்கும் துபாய் மைதானம் மெதுவான தன்மை கொண்டது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகள் இது வரை 14 முறை மோதியுள்ளது. அதில் இரு அணிகளும் தலா 7 முறை வெற்றி பெற்றுள்ளது.

உத்தேச 11 அணி விவரம்:
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – எவின் லூயிஸ் /டேவிட் மில்லர், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ் /தப்ரைஸ் ஷம்சி, சேத்தன் சகாரியா, கார்த்திக் தியாகி, முஸ்தாபிஜூர் ரஹ்மான்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டேவிட் வார்னர்/ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (wk), மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (c), கேதர் ஜாதவ்/ப்ரியம் கார்க், அப்துல் சமத்/அபிஷேக் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!