IPL 2021: SRH vs RR: 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்ற ஐதராபாத்!

0
IPL 2021: SRH vs RR: 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்ற ஐதராபாத்!
IPL 2021: SRH vs RR: 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்ற ஐதராபாத்!
IPL 2021: SRH vs RR: 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்ற ஐதராபாத்!

துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.

முக்கிய போட்டி:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் சீசனின் 14 வது போட்டிகள் இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 60 போட்டிகளில் இன்று 40 வது போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் வழக்கம் போல் மாலை 7:30 மணிக்கு போட்டிகள் தொடங்கப்பட்டது. டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தனர். இதனால் ஐதராபாத் அணி பவுலிங்கில் களம் இறங்கியது.

பிக்பாஸ் சீசன் 5ன் தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் – யார் யாருனு பாருங்க!

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், லூயிஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 36 ரன்கள் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 82 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 164 ரன்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 165 ரன்கள் இலக்குடன் களம் இறங்கியது.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ 8 டைட்டில் வின்னர் – ஸ்ரீதர் சேனா யார் தெரியுமா?

ஐதராபாத் அணியில் ஜேசன் ராய், விருத்திமான் சாஹா தொடக்கத்தில் களம் இறங்கினர். முதலில் 18 ரன்கள் எடுத்து சாஹா தனது விக்கெட்டை இழந்தார். ஜேசன் ராய், வில்லியம்சன் இருவரும் அரைசதம் அடித்துள்ளனர். கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் கூட்டணியாக அதிரடி காட்டினர். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 167 ரன்களை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த தொடரில் கிடைத்துள்ள இரண்டாவது வெற்றியாகும். ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!